திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் வெள்ளிவிழா
உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்று வாழ்த்து
திருவொற்றியூர், பிப்.19:திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜி.ஜெயச்சந்திரன், நிஷாபானு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இதனையடுத்து வெள்ளி விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜி.ஜெயச்சந்திரன், நிஷாபானு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம்,அரிபரந்தா மன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதிகள் சங்கம் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் வழக்குரைஞர் பணியில் 25 ஆண்டுகளைக் கடந்த எஸ்.சுரேஷ்குமார், என்.நாகசுந்தரம், எஸ்.ஆஞ்சலா, டி.பாஸ்கரன் உள்ளிட்ட 8 பேர் பாராட்டி
கௌரவிக்கப்பட்டனர். மேலும் திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து பின்னர் நீதிபதிகளாக பணியில் சேர்ந்த வி.ஆர்.வேல்ராஜ், ஜி.கிறிஸ்டியன், எஸ்.சுகந்தி ஆகியோர்களை நீதிபதி ஜெயச்சந்திரன் பாராட்டினார்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிபதி டி.இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி டி.இந்திராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.திருமால், திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எம்.வசந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சியின் போது கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் என்.நாகசுந்தரம், செயலாளர் கே.முருகன், பொருளாளர் என்.சரவணன் மற்றும் நிர்வாகிகள் பி.ராமமூர்த்தி, பிரபுதாஸ், சி.தன்ராஜ் , சி.ராஜேஷ், அருள்மொழி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment