சென்னைத் துறைமுகம் வந்த கம்பி வடம் பதிக்கும் சிறப்புக் கப்பல்
திருவொற்றியூர்,பிப்.19:கடலுக் குள் தகவல் தொடர்பு கம்பி வடம் பதிக்கும் எல்.வி.நார்த் ஓசன் 105 என்ற சிறப்புக் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்கு வந்துள்ளது. சிறப்பு வடிவம் கொண்ட இக்கப்பல் காண்போரை வியக்க வைக்கும் வகையில் புதுமையாக உள்ளது என பலரும் கூறுகின்றனர்.
இக்கப்பல் குறித்து கப்பலின் ஏஜென்சி மேலாளர் கூறியது,
உலகம் முழுவதும் வளர்ந்து வரும் தகவல் தொடர்பு வளர்ச்சியையடுத்து நாடுகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் கடலுக்கடியில் தகவல் தொடர்பு கம்பி வடம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர்-கொழும்பு இடையே கம்பி வடம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் எல்.வி.நார்த் ஓசன் 105 என்ற கப்பல் ஈடுபட்டு வருகிறது.
இதில் கம்பி வடத்தை நவீன முறையில் கடலுக்குள் செலுத்தும் சிறப்பு உருளைகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகபட்சம் 10 ஆயிரம் அடி ஆழத்திற்கு
கடலுக்கு அடியில் கம்பி வடத்தை செலுத்த முடியும். இது தவிர இப்பணிக்கான
தேவையான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன.
நடுக்கடலில் வேலை செய்யும்போது உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், தளவாடச் சாமான்கள், எரிபொருள் உள்ளிட்டவைகளை ஏற்றிச் செல்வதற்காகவே இக்கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வந்த இக்கப்பல் வரும் புதன்கிழமை புறப்பட்டுச் செல்லும் என்றார்
அவர்.

No comments:
Post a Comment