வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் டி.ஜெயக்குமார்
திருவொற்றியூர், பிப்.13:தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகள் குறித்து யாரும் பொருள்படுத்தப்பட வேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தற்போது கூவாத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் வெளியேறிவிட்டதாக கடந்த இரு தினங்களாக வதந்திகள் பரவின. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை திங்கள்கிழமை பார்வையிட திருவொற்றியூர் வந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, இது குறித்து திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதன்மூலம் சிலர் ஆதாயம் அடைய திட்டமிடுகின்றனர். பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
No comments:
Post a Comment