Friday, 24 June 2016

திருவொற்றியூரில் புதிய வணிக அஞ்சல் வளாகம் 

தனியார் போட்டியைச் சமாளிக்க அஞ்சல் துறை தீவிர நடவடிக்கை 

பொது மேலாளர் மெர்வின் அலெக்ஸாண்டர் 

திருவொற்றியூர், ஜூன் 22:தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் அஞ்சல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தமிழ்நாடு அஞ்சல்துறை பொது மேலாளர் மெர்வின் அலெக்ஸாண்டர் வெள்ளிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
     இந்திய அஞ்சல் துறை சார்பில் திருவொற்றியூரில் வணிக அஞ்சல் வளாகம் திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அஞ்சலக பணிகளுக்கான இயக்குனர் ஏ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு அஞ்சல்துறை பொது மேலாளர் மெர்வின் அலெக்ஸாண்டர் கலந்து கொண்டு புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது மெர்வின் அலெக்டாண்டர் பேசியது, 
      இந்தியாவின் பழமையான துறைகளின் ஒன்றான அஞ்சல் துறையில் முன்பு சுமார் 65 சதவீதம் தபால் போக்குவரத்து மட்டுமே நடைபெற்றது. ஆனால் தற்போது நிதிசார்ந்த பரிமாற்றங்கள்தான் 65 சதவீதங்கள் உள்ளன. வெறும் 25 பைசாவில் செய்தித்தாள்களை எடுத்துச் செல்கிறது அஞ்சல் துறை. அஞ்சல் அட்டை வெறும் 50 பைசா மட்டுமே. இதுபோன்ற சேவைகளையும் அளித்துகொண்டு தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கேற்ற வகையில் நவீன அலுவலக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அஞ்சல் துறை ஊழியர்கள் அனைவருமே விற்பனைப் பிரிவு ஊழியர்களாக மாற்றம் பெற்று வருகின்றனர். இத்துறையின் வளர்ச்சியில்தான் ஊழியர்களின் எதிர்காலமே உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். 
புதிய வளாகத்தை பயன்படுத்த கோரிக்கை:
   திருவொற்றியூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள வணிக அஞ்சல் வளாகத்தை இப்பகுதியில் 
அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மொத்தமாக அனுப்ப வேண்டிய கடிதங்களை அப்படியே கொடுத்தாலே அஞ்சல்துறை ஊழியர்கள் 
அவற்றை மடித்து, உறையில் அடைத்து, முத்திரையிட்டு அனுப்பிவிடுவார்கள். மேலும் பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளும் இங்கு உண்டும். வாடிக்கையாளர்கள் அழைத்தால் அவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றே தபால்களைச் சேகரிக்கும் பணியில் அஞ்சலக ஊழியர்கள் செயல்படுவார்கள் என்றார் அலெக்ஸாண்டர்.
     இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் அஞ்சலக முதுநிலை மேலாளர் டி.நீலகண்டன், அஞ்சல்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி ஆண்ட்ரூ தம்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெட்டிச் செய்தி:

மோசடி குறித்து பதில் அளிக்க முடியாது

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கில் 
பொதுமக்கள் செலுத்திய சுமார் ரூ.4 கோடி ரூபாய் வரவு கணக்கில் வைக்காமலேயே மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரில் அஞ்சல ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுவரை பணத்தைப் பறிகொடுத்த பொதுமக்களுக்கு தங்களது பணம் இதுவரை திரும்பக் கிடைக்கவில்லை. இது குறித்து பொதுமேலாளர் 
அலெக்ஸாண்டரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனே கோபம் அடைந்த அவர், இப்போது நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து மட்டுமே நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். திருமண வீட்டில் அமங்கல விசயங்களைப் பேசுவது கூடாது என்றார். பணத்தை பறிகொடுத்த மக்களின் கேள்விக்கு பதில் என்ன? என்று மீண்டும் கேட்டபோது, உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கோபத்துடன் பதில் அளித்தார் அலெக்ஸாண்டர். அப்போது குறுக்கிட்ட அஞ்சலக சேவைகளுக்கான இயக்குனர் கோவிந்தராஜன், வழக்கு நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் பணம் நிச்சயமாகத் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். ஊழியர்களை வாடிக்கையாளர்களிடம் கணிவுடன் சேவையாற்ற வேண்டும் என அறிவுரை கூறிய பொதுமேலாளர் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் குறித்த ஒரு கேள்விக்கு இவ்வளவு கோபம் ஏன்? அதுதான் உயர்தான் அதிகாரியாக இருக்கிறாரோ?

முகவை க.சிவகுமார்,
திருவொற்றியூர் நிருபர்.

ரூ.3,000 டிக்கெட் ரூ.15,000-க்கு விற்பனை

திடீரென எகிறும் விமானக் கட்டணங்களால் பயணிகள் கடும் அவதி

மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருவொற்றியூர், ஜூன் 23:திடீரென எகிறும் விமானக் கட்டணங்களால் விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் இது குறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவிக்கின்றனர். 
   ஒரு காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களை மட்டுமே நம்பியிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இன்டிகோ, கோஏர், ஸ்பைஸ்ஜெட், ஏர்கோஸ்டா, ஜெட் ஏர்வேஸ், ஏர்ஆசியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. தொடக்கத்தில் பொதுத்துறை விமானங்களை விட தனியார் விமானங்கள் சிறப்பான சேவைகளை அளித்து வருவதாக 
பயணிகள் நம்பியதையடுத்து இந்நிறுவனங்களை நோக்கி மக்கள் பயணிக்கத் தொடங்கினர். மேலும் மிகவும் குறைவான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டதால் ரயிலில் 
முதல், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்களில் குறிப்பிடத் தகுந்த சதவீதத்தினர்  ரயிலிருந்து விமானப் பயணத்திற்கு மாறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இதன் எண்ணிக்கை மூன்று மடங்காக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
பயண நேரம் குறையும் என்பதால் மும்பை, டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களிடையே இயக்கப்படும் விமானங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.  பயணிகளின் ஆர்வம், அவசரத்தைப் பயன்படுத்தி விமானக் கட்டணங்களில் எவ்வித வரைமுறையும் இன்றி விமான நிறுவனங்கள் செயல்படுதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை-கோவைக்கு ரூ.15 ஆயிரம்:
   இது குறித்து தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் உள்ள விஜயகுமார் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறியது,
    எனக்கு சொந்த ஊர் கோவை வடவள்ளி. நான் வேலை நிமித்தமாக நெல்லூர் சென்றிருந்தேன். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை எனது தந்தையார் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனே பேருந்து மூலம் சென்னை புறப்பட்டேன். இதற்கிடையே சென்னையிலிருந்து கோவை செல்லும் காலை 10.55 மணி விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். ஆனால் போக்குவரத்து நெரிசலில் 
விமான நிலையத்தை சென்றடைவதற்குள் விமானம் போய்விட்டது. ரூ.6,600 டிக்கெட் கட்டணத்தில் பாதியளவுக்கே பணம் திரும்பக் கிடைத்தது. இதனையடுத்து பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் விமானத்தில் செல்ல விமான நிறுவனத்தை அனுகினேன். 
முதலில் டிக்கெட் இல்லை என மறுத்த ஊழியர்கள் பின்னர் ரூ.15 ஆயிரம் 
கட்டணத்தில் ஒரு டிக்கெட் இருப்பதாகக் கூறினர். என் தந்தையின் இறுதிச் சடங்கில் 
கலந்து கொள்ள வேறு வழியில்லை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டு கோவை சென்றடைந்தேன். எனக்குப் பக்கத்து இருக்கையில் பயணித்தவர் செலுத்திய கட்டணம்  ரூ.3,099 மட்டுமே என்றார் ஜெயக்குமார். 
டெல்லியிலிருந்து திரும்ப முடியாமல் தவித்தோம்:
      இப்பிரச்னை குறித்து அடிக்கடி வழக்கு விசயமாக டெல்லி சென்று வரும் 
வழக்குரைஞர் எஸ்.அம்பிகைதாஸ் கூறியது,
     நாங்கள் 6 வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய வழக்கு சம்மந்தமாக கடந்த வாரம் டெல்லி சென்றோம். வழக்கு நிலவரம் எப்படி இருக்கும் என்பதை திட்டமிட முடியாததால் ஒரு வழிப் பயண டிக்கெட் எடுப்பதுதான் எங்கள் வழக்கம். செவ்வாய்க்கிழமை இரவு திரும்ப திட்டமிட்டு விமான டிக்கெட் எடுக்க முனைந்தபோது டெல்லி-சென்னை விமான குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 18,500 என இருந்தது. இங்கிருந்து சென்றபோது கட்டணம் ரூ.6 ஆயிரம் மட்டுமே.
வேறு ஊர்களுக்குப் பார்த்தபோது பெங்களூருவுக்கு ரூ.5 ஆயிரம் என இருந்தது. எனவே செவ்வாய்க்கிழம இரவு விமானத்தில் பெங்களூரு வந்து பின்னர் ரயில் மூலம் 
சென்னைக்கு வந்தடைந்தோம். ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டால் அங்கிருந்து விமானத்தில் திரும்பி வருவது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. முன்பே திட்டமிட்டால் மட்டுமே குறைந்த கட்டணத்தில் செல்ல முடியும். அதுவும பயணத்தை ரத்து செய்தால் கட்டணம் பெரும்பாலான நேரங்களில் திரும்பக் கிடைக்காது. இயற்கை விதிமுறைகளுக்கு முரணாக விமான நிறுவனங்கள் செயல்படுவது அப்பட்டமான உண்மை என்றார் அம்பிகைதாஸ்.
சென்னை-அந்தமான் கட்டணம் ரூ.28 ஆயிரம்:
    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று அந்தமான். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து குடியேறியவர்கள்தான். குறிப்பாக போர்ட் பிளைரில் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகம் வந்து திரும்புவார்கள். மேலும் ரத்த உறவுகள் எவரும் இறந்து போனால் உடனடியாக வரவேண்டியதிருக்கும். முன்பெல்லாம் கப்பல் மூலம்தான் பயணம் செய்வார்கள். மிகக் குறைந்த கட்டணம்தான் என்றாலும் சென்றடைய சுமார் 56 மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டும். ஆனால் விமானத்தில் 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்பதால் அவசரம் கருதி விமானப் பயணத்தை விரும்புகின்றனர்.
சாதாரணமாக ஒரு மாதத்துக்கு முன்பு பதிவு செய்தால் சென்னை-போர்ட்பிளைர்  கட்டணம் ரூ. 4,896 மட்டுமே. ஆனால் ஜூன் 24-ல் பயணம் செய்ய முதல்நாள் பதிவு செய்தால் ரூ.24 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம்வரை கட்டணமாகச் செலுத்தினால் மட்டுமே பயணிக்க முடியும். இதே நாளில் போர்ட்பிளைர்-சென்னை விமானக் கட்டணம் ரூ.6,865 மட்டுமே. அதே தூரம்... அதே பயண நேரம்... அதே வசதிகள்.. ஆனால் கட்டணம் மட்டும் பல மடங்கு உயர்வு. இது சிறிதும் நியாயம் அல்ல என்கிறார் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டு போர்ட்பிளையரில் தொழில் செய்துவரும் கே.மாணிக்கவாசகம். 
சூதாட்டம்போல் மாறி வருகிறது:
   இது குறித்து சென்னையைச் சேர்ந்த சி.எஸ். டிராவல்ஸ் உரிமையாளர் சுப்பிரமணி, கிரிஸ்டல் டிராவல்ஸ் இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் கூறியது,
   முன்பெல்லாம் IATA- International Air Transport Association ஏஜென்சி இருந்தால் மட்டுமே விமான டிக்கெட் வழங்க முடியும். ஆனால் தற்போது ஆன்லைன் மூலம் 
நுகர்வோர் நேரடியாக டிக்கெட் பெற முடியும். நாங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 
நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.  அரை மணி நேரத்திற்கு கட்டணங்கள் மாற்றப்படுகின்றன. அவர்கள் வைத்ததுதான் விலை. வார இறுதி நாள்களில் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துகின்றனர். ஒரே விமானத்தில் பயணிக்க பல்வேறு கட்டணங்களில் டிக்கெட் விநியோகம் செய்ய வேண்டியதிருப்பதால் எங்கள் மீதான நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் இழக்கின்றனர். டிக்கெட் ரத்து செய்தால் குறைந்த அளவு பணமே திரும்பப் பெற முடியும். சிங்கப்பூர், மலேசியா சென்று 3 நாள்கள் தங்கிவிட்டு வர ரூ.30 ஆயிரம் மட்டுமே ஒட்டுமொத்தக் கட்டணமாக செலவிடப்படும் நிலையில் அந்தமானுக்கு ஒருவழி பயணத்திற்கே ரூ.28 கட்டணம் என்பது ஏற்க முடியாதது. ஒரே பயணத்திற்கு பல்வேறு ஏஜென்சிகளில் பல்வேறு கட்டணங்கள். மொத்தத்தில்  விமானக் கட்டணங்கள் சூதாட்ட வியாபாரம்போல் ஆகிவிட்டது. இந்த ஏமாற்றுவேலையை உடனடியாகத் தடுத்தாக வேண்டும். சில தினங்களில் காலியாக விமானங்களை இயக்க வேண்டியது உள்ளது. இதனை ஈடுகட்டவே அதிக கட்டணம் வசூலிக்கிறோம் என விமான நிறுவனங்கள் கூறுவது நொண்டிச் சாக்குதான்.  முக்கிய தினங்களில்  ஆம்னி பேருந்தில் இருநூறு ரூபாய் அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கும் அரசு அதே ஊருக்கு விமானத்தில் செல்ல ரூ.15 ஆயிரம் அதிகம் வசூலிப்பதைத் தடுக்காதது ஏன்? என்றனர்.
    ஒரு காலத்தில் வசதியானவர்குகளுக்கு மட்டுமே உரியதாக இருந்து வந்த விமானப் பயணம் தற்போது ஊர் வீட்டு ஊர் சென்று தொழில், வேலையில் ஈடுபட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கும் உரியதாக மாறி வருகிறது. எனவே எதிர்காலத்தில் இத்துறை மேன்மேலும் வளர வேண்டும் எனில் இத்துறையை மத்திய அரசு  உடனடியாக ஒழுங்குபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.  
திருவொற்றியூரில் தீ விபத்து: ரூ.1 லட்சம் சேதம்

திருவொற்றியூர், ஜூன் 21:திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை வணிகக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாயின. 
 திருவொற்றியூர் ராஜாகடை பகுதியில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான வணிகக் கடை உள்ளது. இங்கு வளர்ப்பு பிராணிகளுக்கான அனைத்து வகை உணவுப் பொருள்கள், மருந்து வகைகள், இதர அலங்கார பொருள்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடையின் ஒரு பகுதியில் செவ்வாய்க்கிழம் நண்பகல் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.
   இதி குறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
எண்ணூரில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு

எண்ணூர் முகத்துவாரம் ஆபத்து நிறைந்த பகுதியா?

திருவொற்றியூர், ஜூன் 21:எண்ணூரில் படகு கவிழ்ந்து குப்பன் (50) என்ற மீனவர் செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். 
    எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். மீனவரான இவர் இதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன், ராஜூ ஆகியோருடன் செயற்கை இழை படகில் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.  எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் படகு சென்றபோது திடீரென ஏற்பட்ட சுழற்சியில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் குப்பன் மாயமானார். பாண்டியனும், ராஜுவும் நீந்திக் கரை சேர்ந்தனர். இதனையடுத்து குப்பனைத் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குப்பனின் சடலம் இதே பகுதியில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் காவல் நிலைய போலீஸார் 
குப்பனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆபத்து நிறைந்த பகுதியா?
   இதே பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அனுபவம் வாய்ந்த மீனவர்கள் கூட இப்பகுதியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் 
இப்பகுதி மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் கடலில் ஏற்படும் சுழல்தான் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பங்கிங்காம் கால்வாய் 
வங்கக் கடலில் இங்குதான் சங்கமமாகிறது. மேலும் முகத்துவாரப் பகுதியில் அடிக்கடி தூர்வாரும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் சுழலில் படகுகள் சிக்குவதற்கான காரணங்கள் குறித்து கடலாராய்ச்சி துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவரை ஆபத்து நிறைந்த பகுதி என எச்சரிக்கை மிதவை 
வைக்கப்பட வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர். 
முகவை க.சிவகுமார்,
திருவொற்றியூர் நிருபர்.

பிரச்னைகளை மூடி மறைக்கும் சென்னைத் துறைமுக நிர்வாகம் 

கேள்விக்குறியாகும் எதிர்காலம் 

திருவொற்றியூர், ஜூன் 20:சென்னைத் துறைமுகத்தில் இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மூடி மறைக்கும் வேலையில் துறைமுக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது, இதன் மூலம் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக துறைமுக உபயோகிப்பாளர் புகார் தெரிவிக்கின்றனர். 
   இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாகக் கருதப்படும் சென்னைத் துறைமுகம் சுமார் 130 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. ஆண்டுக்கு சுமார் 6.5 கோடி மெட்ரிக் டன் சரக்குகள்வரை கையாளப்பட்டு வந்தது. பெருநகரத்தின் எல்லைக்குள் இத்துறைமுகம் அமைந்துள்ளதால் இதனை விரிவாக்கம் செய்வதில் பெரும் சிக்கல்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 
     தமிழகத்தைச் சேர்ந்த டி.ஜி.வெங்கட்ராமன், டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன் ஆகியோர் கப்பல்த்துறையின் கேபினட் அமைச்சர்களாகவும்,  எஸ்.திருநாவுக்கரசர் இணை அமைச்சராகவும் இருந்துள்ளனர்.  தற்போது பொன்.ராதாகிருஷ்ணன் இத்துறையின் இணை அமைச்சராக உள்ளார். இருப்பினும் சென்னைத் துறைமுகம் இந்தியாவின் இதர துறைமுகங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ச்சியடையவில்லை.  மத்திய, மாநில அரசுகளிடையே இணக்கமான போக்கு இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் சென்னைத் துறைமுகத்தின் தலைவர்களாக இருந்தவர்களின் பொறுப்பற்ற தன்மை, மெத்தனம் உள்ளிட்டவை இதர காரணங்களாக உள்ளன. மேலும் தொடரும் பிரச்னைகள் குறி்த்து துறைமுக நிர்வாகம் 
மூடிமறைத்து வருவதாக துறைமுக உபயோகிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
ஜப்பான் நிறுவனத்தின் ஆய்வறிக்கை:
    சென்னைத் துறைமுகத்தில் இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை குறி்த்து ஜப்பான் சர்வதேச கூட்டாண்மை ஏஜென்சி (JICA- Japan International Cooperation Agency)ஆய்வறிக்கையை துறைமுக நிர்வாகத்திடம் அளித்து வருகிறது. இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த அறிக்கை மீதான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துறைமுகத் தலைவர் சிரில் ஜார்ஜ் முன்பைவிட போக்குவரத்து நெரிசல் ஆச்சரியப்படத் தக்கவகையில் குறைந்துள்ளதாகவும், காசிமேடு பவானியம்மன் கோயில் எல்லையிலிருந்து துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத்திற்கு வர 17 நிமிடங்கள் மட்டுமே ஆவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.  ஆனால் நடைமுறையில் ஒருநாள்கூட இது சாத்தியமல்ல என்பது சாதாரண ஒரு ஓட்டுனருக்கே தெரியும் என்பது உண்மை.
பல கி.மீ. தூரத்திற்கு காத்திருக்க காரணம் என்ன?:
   இக்கூட்டத்தில் முதலாவது சரக்குப் பெட்டக முனையத்தை நிர்வகித்து வரும்  டி.பி.வேர்ல்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் அனில் சிங் பேசியது, இத்துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகக் கூறப்படும் புகாரை நம்பவே முடியவில்லை. துறைமுக நுழைவாயிலிருந்து சுமார் 8 கிமீ தூரம் வரை வரிசையில் காத்திருந்த கண்டெய்னர் லாாிகளை ஆய்வு செய்தபோது துறைமுகத்திற்கு நுழைவதற்காக காத்திருக்கவில்லை. ஆவணங்கள் உள்ளிட்ட வேறு காரணங்களுக்காகவே காத்திருப்பதாக லாரி ஒட்டுனர்கள் தெரிவித்தனர் என்றார் அனில் சிங். மேலும் முனையங்களின் முக்கிய அதிகாரிகளும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் இல்லை என்பதையே வலியுறுத்திக் கூறினர். இக்கூட்டத்தில் துறைமுக உபயோகிப்பாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.
20 கி.மீ. தூரத்திற்கு காத்திருக்கும் அவலம் ஏன்?
    சில தினங்களுக்கு முன்பு கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைத் தீர்த்துவிட்டதாக பத்திரிகை செய்தி அனுப்பியது துறைமுக நிர்வாகம். ஆனால் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைத் துறைமுகத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் வரிசைகட்டி நின்றன. மேலும் இவற்றை ஒழுங்குபடுத்துவதாக் கூறி சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல் சாவடிகள் வைக்கப்பட்டு லாரிகள் பல மணி நேரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் லாரி ஓட்டுனர்கள் தண்ணீர், உணவு இன்றி தவித்ததை நாம் நேரில் பார்க்க முடிந்தது.மேலும் விரைவாகச் செல்வதற்கு 'சிறப்பு வரிசை'யும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்ற தண்ணீர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை, மகள் ஞாயிற்றுக்கிழமை இறந்து போன சம்பவம் இப்பகுதி மக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. இவ்வாறு இப்பிரச்னையால் பொதுமக்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில் துறைமுக நிர்வாகம் பிரச்னையை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
கேள்விக்குறியாகும் எதிர்காலம்:
      இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுங்க இ்ல்ல முகவர் சங்க நிர்வாகிகள் கே.வி.வி.கிரி, நடராஜா ஆகியோர் கூறியது,
     மதுரவாயல் மேம்பாலத் திட்டம் கைவிடப்பட்டது, தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை, அருகில் அமைந்துள்ள தனியார் துறைமுகங்களின் போட்டி
உள்ளிட்ட பிரச்னைகளால் நாட்டின் பழமையான துறைமுகங்களில் ஒன்றான சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் இங்கு யாருக்கும் ஆர்வமில்லை. இதனால் இத்துறைமுகத்தை நம்பியுள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பெரும்பாலான நிறுவனங்களுக்கு  
வர்த்தகப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து ஆள்குறைப்பு, சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தொழில் நகரங்களான திருப்பூர், ஈரோடு, கோவை, ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் சென்னைத் துறைமுகத்தில் நிலவும் நெரிசல் பிரச்னையால் தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன என்றனர்.  
தமிழக முதல்வர் தலையிட்டால் மட்டுமே சாத்தியம்:
    சென்னைத் துறைமுக நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழகத் தொழில் வளர்ச்சியின் முக்கிய ஆதாரம் சென்னைத் துறைமுகம்தான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வரும் சென்னைத் துறைமுகத்தை சீரமைக்க தமிழக முதல்வரின் உதவியை நாடவேண்டியதுதான் துறைமுக நிர்வாகத்தின் கடமையாகும். எனவே பிரச்னைகளை மூடிமறைப்பதை விட்டுவிட்டு, தமிழக முதல்வரைச் சந்தித்து துறைமுகத்தின் உண்மை நிலைமையை எடுத்துரைக்க வேண்டும். இல்லையெனில் இத்துறையின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்பொருமுறை கூறியது போல், பிரச்னைகளைத் தீர்க்கவில்லை எனில் எதிர்காலத்தில் சென்னைத் துறைமுகம் அருங்காட்சியகமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.  
இந்திய, கொரிய கடலோரக் காவல்படையினர் கூட்டுப்பயிற்சி

சென்னை அருகே நடுக்கடலில் நடைபெற்றது.

திருவொற்றியூர், ஜூன்.10:இந்திய, கொரிய கடலோரக் காவல்படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னை அருகே நடுக்கடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
     இந்திய கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்காகவும், இந்திய வீரர்களுடன்
இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும் தென் கொரிய நாட்டின் கடலோரக் காவல்படை கப்பல் (3009) கடந்த புதன்கிழமை சென்னை வந்தடைந்தது. இக்கப்பலில் சுமார் 73 அதிகாரிகள், வீரர்கள் வந்திருந்தனர். இக்கப்பலை இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று வரவேற்றனர். 
வியாழக்கிழமை இரு நாட்டு வீரர்களும் பங்கேற்ற கைப்பந்துப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 
     இந்நிலையில் இரு நாட்டு வீரர்கள் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி, ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடுக்கடலில் நடைபெற்றது. இதில் இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல்களான சாகர், சமுத்ரா பகீரதர், ராஜ்தரங், அனாக், டோர்னியர் ரோந்து விமானம், சேடக் ஹெலிகாப்டர் உள்ளிட்டவை பங்கேற்றன. 
அப்போது கடல் கொள்ளையர்களிடமிருந்து வணிகக் கப்பலை மீட்டெடுத்தல், கடலில் சிக்கிய மீனவர்களைக் காப்பாற்றுதல், தீ அணைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் கூட்டுப் பயிற்சியின்போது செய்து காட்டப்பட்டன. பின்னர் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
   இந்நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல்படை தலைவர் ராஜேந்திரசிங், கொரிய கடலோரக் காவல்படை ஆணையர் ஹாங், கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முகவை க.சிவகுமார்.
திருவொற்றியூர் செய்தியாளர் 

சீர்கேடுகளின் விளிம்பில் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் 

முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

திருவொற்றியூர், ஜூன் 9:தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தற்போது சீர்கேடுகளின் விளிம்பில் உள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்டது. மிகப் பெரிய திருக்குளம், திருத்தேர், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு அம்சங்களும் கொண்ட இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வசதிக்கேற்ப கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை என பெரும்பாலானோர் புகார் தெரிவிக்கின்றனர். பு
ஆக்கிரமிப்புகளால் அவதி:
   கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக கோயிலின் வாசல் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை போதுமானதாக இல்லாததால் விசேஷ தினங்களில் தேரடியெங்கும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. கோயில் மதில் சுவரைச் சுற்றிலும் நூற்றுக்கனக்கான இருசக்கர, கார்கள், வேன்களை நிறுத்தி வைக்க முடியும். ஆனால் இப்பகுதி முழுவதும் அருகில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் வாகனங்களை நிரந்தரமாக நிறுத்தி வைக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய போக்குவரத்து காவல்த்துறை, கோயில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. திருமணத்தை தவற விட்ட பொதுமக்கள்:
   வியாழக்கிழமை சுபமுகூர்த்த தினம் என்பதால் சுமார் 25 திருமணங்கள் இக்கோயிலில் நடைபெற்றன. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலுக்கு திரண்டு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களும் தேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து இப்பகுதி முழுவதும் போக்குவரத்து முழுமையாகத் தடைபட்டது. இதனையடுத்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு பெரும்பாலானோர் நடந்தே கோயிலுக்கு வந்தனர். 
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதற்கேற்ப கூடுதல் வசதிகளைச் செய்ய 
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வியாழக்கிழமை மணமக்கள் கூட மிகுந்த சிரமத்திற்கிடையேதான் உள்ளே வர முடிந்தது. மேலும் ஏராளமானோர் திருமணம் முடிந்த பின்னர்தான் வரமுடிந்தது. 
பராமரிக்கப்படாத திருக்குளங்கள்:
    இக்கோயிலின் அழகே திருக்குளம்தான். ஆனால் பல ஆண்டுகளாக இக்கோயில் குளம் சீரமைக்கப்படவில்லை. தூர்வாருவதாகக் கூறி ஜேசிபி இயந்திரங்களை இறக்கியபோது படிக்கட்டுகள் சேதமடைந்தன. ஆனால் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இதனைக் கூட சீரமைக்கவில்லை. திருக்குளத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாட்டுவண்டிகள், ஆட்டோக்கள் நிரந்தரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஈமச்சடங்கு மண்டபத்தின் அருகிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. குளத்தின் தென் பகுதியில் 
பூக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. பூக்கடைகள் என்று கூறப்பட்டாலும் இங்கேயே சமையல் செய்து சாப்பிடும் அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றி சிறிய அளவிலான வரிசைக் கடைகளை அமைக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கைவிடுத்து பல ஆண்டுகளாகிவிட்டது. 
புற்கள், பிளாஸ்டிக் குப்பைகள்:
     கடந்த ஆண்டு பெய்த கனமழையில்கூட திருக்குளம் நிரம்பாத நிலையில் இனி வரும் கனமழைக்காவது குளத்திற்கு மழைநீர் வருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. திருக்குளம் முழுவதும் கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன. வெளியில் உள்ள குளத்தில் இருந்த மீன்கள் சேகரிக்கப்பட்டு கோயில் உள்பிரகாரத்தில் உள்ள குளத்தில் விடப்பட்டன. ஆனால் இங்கும் தண்ணீர் குறைவாகவே உள்ளது. மேலும் இக்குளம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பியுள்ளன. 
சீர்கேட்டின் விளிம்பில்...:
    கோயில் ஒவ்வொரு பகுதியும் ஆகம விதிப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்பது 
கட்டாயம் ஆகும். ஆனால் இங்குள்ள கோசாலை, நந்தவனம், திருப்பள்ளியறை உள்ளிட்டவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. கோசாலையில் பக்தர்களால் காணிக்கையளிக்கப்பட்ட சுமார் 15 மாடுகள் உள்ளன. இவற்றுக்கு தினமும் தீனி போடுவது முதல் சாணங்கள் அப்புறப்படுத்துவதைவரை முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. திருப்பள்ளியறை முழுதும் பழைய சாமான்கள் போட்டவைக்கப்படுகிறது. நந்தவனம் பராமரிப்பதிலும் போதிய கவனிப்பு இல்லை. இங்கு கோயிலில் புரோகிதர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள்வரை அனைத்து தரப்பினரும் தங்களது சக்திகேற்ப முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவை அனைத்திற்கும் கோயில் நிர்வாகம் உடந்தையாகவே உள்ளது வேதனையாக உள்ளது. ஒட்டுமொத்த கோயிலும் சீர்கேட்டின் விளிம்பில்தான் உள்ளன. 
விசாரணைக்கு உத்தரவிடுவாரா முதல்வர்?:
     பழமையான கோயில் என்றாலும் திருவொற்றியூரில் வசிப்போர் பெரும்பாலானவர்கள் வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள்தான். மேலும் இக்கோயிலுக்கு வெளியிலிருந்து வரும் பக்தர்களே மிகவும் அதிகம். எனவே கோயிலில் இருந்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இப்பகுதி மக்களுக்கு போதிய
விழிப்புணர்வு இல்லை. இதுதான் சீர்கேடுகளுக்கு மூல காரணமாக உள்ளது. திருவொற்றியூர் கோயில் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தனிப் பக்தி எப்போதும் உண்டு. தங்கத் தேர், திருத்தேரோட்டம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட அனைத்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால்தான் நடைபெற்றது என நினைவு கூறும் இக்கோயில் பக்தர்கள் தற்போதை நிலை குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. 
திருவொற்றியூரில் அறிவிப்பின்றி ஜமாபந்தி நடத்திய அதிகாரிகள் 

சொற்ப எண்ணி்க்கையில் மனுக்கள்

திருவொற்றியூர், ஜூன் 3:திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை வருவாய்த்துறை சார்பில் ஜமாபந்தி நடைபெற்றது. ஆனால் சொற்ப எண்ணிக்கையில்தான் பொதுமக்கள் பங்கேற்றனர்.
   வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் மூலம்தான் அரசு வழங்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் சலுகைகளை பொதுமக்கள் பெற முடியும். வருவாய் வரி வசூல், முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் திட்டங்கள், மாணவர் கல்வி உதவித் தொகை மற்றும் இலவச பட்டா வழங்குதல், பட்டா மாற்றம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உடனடியாக வருவாய்த் துறை சான்றிதழ்களை விண்ணப்பித்த இடத்திலேயே வழங்கும் திட்டம்தான் ஜமா பந்தி திட்டம். இதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, கோட்ட 
வருவாய் அதிகாரி, வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்பதும்,  இதனை ஒரு வாரத்திற்கு முன்பே கிராமங்களில் தண்டோரா, நகரங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பது வழக்கம். 
விளம்பரம், அறிவிப்பு இல்லை:
    இந்நிலையில் திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை  ஜமாபந்தி நடைபெற்றது. திருவொற்றியூர் தாசில்தார் சிராஜ்பாபு முன்னிலை வகித்தார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். ஆனால் இதில் 132 பேர் மட்டுமே மனுக்களை வழங்கினார். இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கமாக தாலுகா அலுவலகம் வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு சான்றிதழ்களுக்காக தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அலைச்சலுக்கு உள்ளாகும் நிலையில் வீடு தேடி வந்து வழங்கும் சான்றிதழ்களைப் பெற அதிகம் பேர் ஏன் வரவில்லை என 
வியப்பு ஏற்பட்டது. ஜமாபந்தி குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவந்துள்ளது. பின்னர் மனுக்கள் தயார் செய்து வருவதற்குள் நிகழ்ச்சியே முடிந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
விளக்கம் கேட்ட கலெக்டர்: 
    இது குறித்து விசாரித்தபோது ஜமாபந்தி குறித்து திருவொற்றியூர் 
தாலுகா அலுவலகம் சார்பில் போதுமான விளம்பரம் மற்றும் அறிவிப்புகள் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி பொதுமக்கள்  
கூட்டம் அதிகம் இல்லாததால் இறுதிவரை நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும் 
போதுமான அறிவிப்புகளை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாதது ஏன் என்பது 
விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
நாடு முழுவதும் மறைமுக வரியாக ரூ.7 லட்சம் கோடி வசூல்

மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய தலைவர் நஜிப் ஷா பேட்டி

திருவொற்றியூர், ஜூன் 1:கடந்த நிதியாண்டில் சுங்கம், கலால், சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் 7.09 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது என மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் (CBEC-Central Board of Excise and Customs) தலைவர் நஜிப் ஷா புதன்கிழமை சென்னையில் தெரிவித்தார். 
    சென்னைத் துறைமுகத்தில் ஏற்றுமதிக்கான ஆவணப் பரிசோதனையில் ரேடியோ அதிர்வெண்கள் மூலம் கண்டறியும் சாதன முறை (RFID-Radio Frequency Identified Device) புதன்கிழமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இப்புதிய திட்டத்தை மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் தலைவர் நஜீப் ஷா தொடங்கி வைத்தார். 
அப்போது நஜீப் ஷா கூறியது,
 சட்டங்களை அமலாக்குவதில் இது போன்ற புதிய நடைமுறைகளை நிச்சயமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதன்மூலம் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படும். மேலும் இப்புதிய நடைமுறை மூலம் பல்வேறு நிலைகளில் இருந்து வரும் அலுவலர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும். இப்புதிய நடைமுறையை அனைத்து துறைமுகங்கள் மற்றும் முனையங்களிலும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். 
ஒற்றைச் சாளர முறை:
     மேலும் சுங்கத்துறையில் சமீபத்தில் அறி்முகம் செய்யப்பட்ட ஒற்றைச் சாளர முறையில் அனைத்து ஏஜென்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக்காக பல்வேறு இடங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதன் தலைமை ஏஜென்சியாக சுங்கத்துறை விளங்குகிறது. இருப்பினும் தொடக்கத்தில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். தற்போது 99 சதவீத ஆவணப் பரிசோதனைகள் மின்னணு முறையில் செயல்படுத்தப்படுகிறது. எந்த ஒரு துறையிலும் அடிமட்டத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் அவசியமானது. அப்போதுதான் உயர் அதிகாரிகள் சிறந்த கொள்கை முடிவு எடுக்க முடியும்.
மறைமுக வரியாக ரூ.7.09 லட்சம் கோடி வசூல்:
    நாடு முழுவதும் கலால், சுங்கம், சேவை வரிகள் (மறைமுக வரிகள்) மூலம் ரூ.7.09 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலம் மூலம் 
10 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார் நஜீப் ஷா. 
    இந்நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் சிரில் ஜார்ஜ், சுங்கத்துறை முதன்மை ஆணையர் எஸ்.கே.தாஸ், சரக்குப் பெட்டக முனைய செயல் அதிகாரிகள் கிரிஷ்ணதாஸ், சிவகுமார், சுங்க இல்ல முகவர் சங்கத் தலைவர் கே.வி.வி.கிரி, செயலாளர் நடராஜன், வர்த்தக சங்க நிர்வாகிகள் சோழநாச்சியார், ஜெ.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெட்டிச் செய்தி:
புதிய நடைமுறை நாட்டிலேயே முதல் முறை:
கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள RFID என்ற புதிய நடைமுறை குறித்து சரக்குப் பெட்டக நிலையங்களின் தேசிய சங்க நிர்வாகிகள் அருண், பத்மநாபன் கூறியது,
   தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இப்புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சரக்குப் பெட்டக நிலையங்களிலிருந்து புறப்படும் கண்டெய்னர்கள் குறித்த ஆவணங்கள், ஓட்டுனர் பெயர் உள்ளிட்ட அனைத்தும் 
ஸ்கேன் செய்யப்பட்டு சேகரிக்கப்படும். பின்னர் மின்னணு எண் வழங்கப்படும். இந்த கண்டெய்னர் சென்னைத் துறைமுகத்தின் நுழைவு வாயிலுக்கு வந்தவுடன் இங்கு பொருத்தப்பட்டுள்ள சிறப்புக் கருவு இந்த மின்னணு எண்ணை ஆய்வு செய்யும். அனைத்து விபரங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் மேற்கொண்டு எவ்வித பரிசோதனையும் இன்றி உடனடியாக் கண்டெய்னர் விடுவிக்கப்படும். இதன் மூலம் 
நுழைவு வாயிலில் காத்திருக்கும் நேரம் குறையும். இதனையடுத்து கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல ஆண்டுகளாக இருந்து கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு இப்புதிய முறைமூலம் 
விடிவு காலம் ஏற்படும் என்றனர்.
45 நாள்கள் மீன் பிடி தடைகாலம் முடிவுக்கு வந்தது

மீன்வரத்து அதிகரித்து விலை குறையும்?

திருவொற்றியூர்,மே 29: மீன் வளத்தை மேம்படுத்தும் வகையில் வங்கக் கடலில் விசைப்படகுகளில் மீன் பிடிக்க ஏப்ரல் மாதம் 15 தேதி முதல் தொடங்கிய தடை 45 நாள்களுக்குப் பிறகு மே 29 (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. .           
   இதனையடுத்து தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) அதிகாலை முதல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.  
      கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால்  இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும்.  இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி கடந்த 2000-ஆண்டு வங்கக் கடல் பகுதியில் 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. இது கடந்த 16 ஆண்டுகளாக இந்த தடை நடைமுறையில் தொடர்கிறது. இதற்கு மீனவர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 61 நாள்களாக நீடிக்க மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து 45 அல்லது 61 நாள்களா என்பதை மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் ஆண்டுக்கு 61 நாள்கள் தடையை ஏற்றுள்ளன.  தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே இருந்துவந்த 45 நாள் தடையே தொடரும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த ஆண்டும் இதே நடைமுறை தொடர்கிறது.
    இதனையடுத்து கடந்த ஏப்ரல் 15 முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தற்போது இத்தடை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுற்றதையடுத்து  திங்கள்கிழமை அதிகாலை முதல் தமிழகம் முழுதும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 8,500 விசைப் படகுகள் உள்ளன.  மீன் பிடி தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனை ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அதிமுகவும், திமுகவும் குறிப்பிட்டிருந்தன. எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த உதவித் தொகை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மீன் விலை குறையும்?:
    விசைப்படகுகள் மூலம்தான் அதிக அளவில் மீன் பிடிக்கப்படும். பைபர் மட்டும் கட்டுமரங்கள் மூலம் குறைந்த அளவில் தான் மீன் பிடிக்க முடியும். மேலும் எடை அதிகம் கொண்ட பெரிய வகை மீன்கள், இரால் உள்ளிட்டவைகளும் விசைப்படகுகள் மூலம் தான் கிடைக்கின்றன. இந்நிலையில் விசைப்படகுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் மீன்வரத்து குறைந்து விலையும் உயர்ந்தது. தற்போது தடை நீங்கியுள்ள நிலையில்  இன்னும் ஒரு வாரத்தில் மீன் விலை படிப்படையாகக் குறையும் என காசிமேடு மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருவொற்றியூரில் ரூ.20 லட்சம் மீன்பிடி படகுகள் தீ வைத்து எரிப்பு

திருவொற்றியூர், மே 26:திருவொற்றியூரில் 9 மீன்பிடி பைபர் படகுகள் புதன்கிழமை தீவைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவத்தால் இப்பகுதியில் தொடர் பதட்டம் இருந்து வருகிறது. 
   திருவொற்றியூர் காசிவிஸ்வநாதர் கோயில் குப்பத்தைச் சேர்ந்தவர் மீனவர்கள் ராமகிருஷ்ணா நகர் அருகே உள்ள கடற்கரையிலிருந்து பைபர் படகுகள் மூலம் 
மீன்பிடித்து வருகின்றனர். அதிகாலையில் கடலுக்குச் சென்று காலை சுமார் 10 மணியளவில் கரைக்குத் திரும்புவார்கள். இவர்களின் படகுகள், வலைகளை கடற்கரையிலேயே விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல கடற்கரைக்கு வந்த சிலர் இங்கு வைக்கப்பட்டிருந்த படகுகளில் பெரும்பாலானவை தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது கண்டு 
அதிர்ச்சிடைந்தனர்.  இது குறித்து காசி விஸ்வநாதர் கோயில் குப்பத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினார். மேலும் தடய அறிவியல் சோதனை நடத்தப்பட்டது. சேதமதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்த தகவல்களை போலீஸார் திரட்டி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சிறையில் உள்ளபிரபல ரவுடி ஒருவரின் ஆதரவாளர்கள் இங்கு வந்து மது அருந்தியதாகவும்,  இதனை இங்கிருந்த மீனவர்கள் தட்டிக் கேட்டதையடுத்து இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இருதரப்பிலும் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
      தீ வைத்து எரிக்கப்பட்ட படகுகளை திருவொற்றியூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி, மாமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், அதிமுக பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இது குறித்து எண்ணூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.