பங்களாதேஷ் கடலோரக் காவல்படை கப்பல் சென்னை வருகிறது
திருவொற்றியூர், பிப்.12:பங்களாதேஷ் நாட்டின் கடலோரக் காவல்படை கப்பலான தாஜூதீன் செவ்வாய்க்கிழமை சென்னை வருகிறது. இக்கப்பலை இந்தியக் கடலோரக்காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா
நேரில் வரவேற்கிறார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நல்லெண்ணம் வளர்த்தல், பாதுகாப்பு தொழில்நுட்ப உத்திகளை பரிமாறுதல் உள்ளிட்டவைகள் மேம்படுத்தும் பணிகளை இந்திய கடலோரக் காவல்படை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பங்களாதேஷ் கடலோரக் காவல்படை
கப்பலான தாஜூதீன் செவ்வாய்க்கிழமை சென்னை வருகிறது. வரும் பிப்.17-வரை இக்கப்பல் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதேபோல் இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான பகீரதர் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இதில்
இதில் இரு நாட்டு வீரர்களும் கப்பல்களைப் பார்வையிடுவார்கள். பின்னர்
கடல்சார் மீட்பு மையத்தை பங்களாதேஷ் வீரர்கள் பார்வையிடுகின்றனர். அப்போது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
பின்னர் பிப்.17 இக்கப்பல் புறப்பட்டுச் செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment