Monday, 7 December 2015

திருவொற்றியூர் பாரதி பாசறை நேரு தேசியக் கலைவிழா போட்டிகள்

நவ.23 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

திருவொற்றியூர், நவ.13: திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நடைபெற உள்ள 31-ஆம் ஆண்டு நேரு தேசியக் கலை விழாவினை ஒட்டி மாணவர்களுக்கிடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்கள் வரும் விண்ணப்பங்களை நவ.23-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு பாரதி பாசறை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
     இது குறி்த்து திருவொற்றியூர் பாரதி பாசறை செயலாளர் முனைவர் மா.கி.இரமணன் கூறியது,
   வெள்ளி விழா கண்ட திருவொற்றியூர் பாரதி பாசறை ஆண்டுதோறும் நேரு தேசியக் கலை விழாவினை சிறப்பாக நடத்தி வருகிறது.  இந்த ஆண்டு இவ்விழா வரும் நவ.28 -ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.   இதனை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளோம்.
    முதல் 5 வகுப்புகள் வரைய பயிலும் மாணவர்களுக்கு பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தலைப்பில் இசை (தலா 3 நிமிடம்), 
 6 முதல் 8 வகுப்பு வரை 'நலம் தரும் நல்யோகாசனங்கள்' என்ற தலைப்பில் ஓவியம் வரைதல் (60 நிமிடம்), 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு 'கனவில் பேசும் கலாம்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி (தலா 3 நிமிடம்), 11, 12 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 'அன்பால் இணையும் அண்டை நாடும், வீடும்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டிகளும் நடைபெற உள்ளன.
              இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்புதலுடன்  நவ.23 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதுடன் அதிக பரிசுகளை பெறும் மாணவர்களின் பள்ளிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது.  போட்டிகள் நவ.28 சனிக்கிழமை 2 மணிக்கு நடைபெறும்.  விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பாரதி பாசறை, 19/13, சோமசுந்தரம் நகர், கிராமத்தெரு, திருவொற்றியூர், சென்னை-600019, தொலைபேசி: 25735422, 9444182153  என மா.கி. ரமணன் தெரிவித்தார்

No comments:

Post a Comment