திருவொற்றியூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது
3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு
திருவொற்றியூர், நவ.23: விசாகபட்டனத்திலிருந்து இரும்புத் தகடு ஏற்றி வந்த சரக்கு ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை தடம் புரண்டது. இதனையடுத்து சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி மார்க்கத்தில் சுமார் 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து முடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
ஆந்திரா மாநிலம் விசாகபட்டனத்திலிருந்து சென்னை திருவொற்றியூரில் உள்ள கான்கார் சரக்கு பெட்டக முனையத்திற்கு இரும்புத் தகடுகளை ஏற்றிய சரக்கு ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. மேலும் தடம் விலகிய ரயில் சக்கரங்கள் மண்ணில் புதைத்தன்.
இதனையடுத்து உடனடியாக இம்மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டி சென்ற புறநகர் ரயில்கள் வ.உ.சி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம் புரண்ட ரயிலை படிப்படியாக சீரான பாதைக்குக் கொண்டு வந்தனர். இதனையடுத்து சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு இம்மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
மூன்று மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். காலை நேரம் என்பதால் வேலைக்குச் சென்றவர்கள் நடுவழியில் இறங்கி நடந்து சென்று பேருந்துகள் மூலம் அலுவலகம் சென்றனர். மேலும் காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் ஜன் சதாப்தி விரைவு ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக 9.35 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. சென்றது.
No comments:
Post a Comment