மணலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
மாதவரம் வி.மூர்த்தி எம்.எல்.ஏ வழங்கினார்.
திருவொற்றியூர்,நவ.28:கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பாதித்த மணலி சடையங்குப்பம் பகுதியில் உள்ள 41 இருளர் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகளை மூர்த்தி எம்.எல்.ஏ. சனிக்கிழமை வழங்கினார்.
சென்னையை அடுத்த மணலி அருகேயுள்ள சடையங்குப்பம் பர்மாநகர் பகுதியில் புழல் ஏரி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. இதில் 41 இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்த குடிசை வீடுகள் முழுவதும் வெள்ளநீரில் மூழ்கியது. இதனையடுத்து இங்கு வசித்த இரு நூறுக்கும் மேற்பட்டோர் சாத்தாங்காடு இரும்பு மொத்த அங்காடி அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 41 குடும்பங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் தலா ரூ.4,100 ரொக்கம் மற்றும் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. அரசு நிவாரண உதவிகளை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.மூர்த்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, வருவாய் கோட்ட ஆட்சியர் வீரப்பன், மணலி மண்டல குழு தலைவர் தங்கசிவம், வட்டாட்சியர் ஏழுமலை வருவாய் ஆய்வாளர் முகம்மது அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment