ஏரிகளில் உபரி நீர் திறக்கப்பட்டது:
மணலி புதுநகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
திருவொற்றியூர்,டிச.1:தொடர்மழை யால் செங்குன்றம், சோழவரம், பிச்சாட்டூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிவதையடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மணலி புதுநகர், சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்மழையால் ஏரிகள் நிரம்பி வருவதையடுத்து ஒவ்வொரு ஏரியிலிருந்தும் ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப உபரி நீர் திறந்து விடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி திறந்து விடப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் நீர்மட்டும் கொள்ளளவை எட்டியதையடுத்து சுமார் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் அனைத்தும் செங்குன்றம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து செங்குன்றம் ஏரியில் சுமார் விநாடிக்கு 6 ஆயிரம்
கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் செங்குன்றம் ஏரி அருகே அமைந்துள்ள சோழவரம் ஏரியின் உபரி நீரால் கொற்றலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணலி புதுநகர், சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலையம், இடையன்சாவடி தொடக்கப்பள்ளி மற்றும் சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செங்குன்றம் ஏரி கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், விச்சூர், ஆண்டார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
திருவொற்றியூரில் பேருந்து கவிழ்ந்தது:
தொடர்மழையால் திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கார்கில் நகர், சத்தியமூர்த்திநகர், ராஜாஜி நகர், பெரியார் நகர், அம்பேத்கார் நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் வெள்ளநீர் சுமார் இரண்டி உயரத்திற்கு தேங்கியுள்ளது. தேங்கியுள்ள நீர் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் உரிஞ்சப்பட்டு பங்கிங்காம் கால்வாயில் வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் விம்கோ நகரிலிருந்து அஜாக்ஸ் பேருந்து நிலையம் வரை சுமார் மூன்றடி உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் எண்ணூரிருந்து திருவான்மியூர் செல்லூம் 1சி பேருந்து இச்சாலை வழியே வந்தபோது
பொன்னியம்மன் கோயில் அருகே வந்தபோது பேருந்தின் இடது புற டயர்கள் அனைத்தும் பள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து பேருந்து கவிழத் தொடங்கியது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு கிழே இறங்கி தப்பினர்.
Click here to Reply, Reply to all or Forward
|
No comments:
Post a Comment