Monday, 7 December 2015


எண்ணூர் விரைவு சாலையில் திடீர் பள்ளம்

உடனடியாகக் கவனிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருவொற்றியூர், நவ.21: கனமழையால் தேங்கிய மழைநீரால் எண்ணூர் விரைவுசாலையில் சனிக்கிழமை திடீர் பள்ளம் ஏற்பட்டது. ஆனால் உடனடியாக இப்பள்ளம் கவனிக்கப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது.
   திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே எண்ணூர் விரைவு சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீீஸார் சனிக்கிழமை இரவு வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுங்கச் சாவடியிலிருந்து எண்ணூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் ஏற்பட்டிருந்த பெரிய பள்ளத்தைப் பார்த்து திடுக்கிட்டு நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கீழே விழுந்தார். இதனயைடுத்து அருகில் இருந்த போக்குவரத்து போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது 
சுமார் 3 அடி அகலத்தில் 6 அடி ஆழத்திற்கு குழி விழுந்த பள்ளம் ஏற்பட்டிருந்ததது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளத்தைச் சுற்றி தடுப்பு ஏற்படுத்திய போலீஸார் அவ்வழியே வந்த வாகனங்களை எச்சரித்து அனுப்பினர். 
      மேலும் எண்ணூர் விரைவு சாலையில் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. வாகன வெளிச்சத்தில்தான் அனைவரும் சென்று வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக கவனித்திருக்காவிட்டால் பெரும் அளவிலான விபத்து ஏற்பட்டிருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சாலை ஓராண்டுக்கு முன்புதான் புதிதாக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment