கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி ரயில்வே குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர், செப்.3:அடிக்கடி நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி திருவொற்றியூரில் ரயில்வே குடியிருப்புவாசிகள் சனிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்களை நடைபெறுவதாகக் கூறி ரயில்வே அலுவலகம் முன்பு குடியிருப்புவாசிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து அவர்கள் கூறியது,
இங்குள்ள ரயில்வே குடியிருப்பில் 67 வீடுகள் உள்ளன. சுமார் 250 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஒதுங்குப்புறமாக உள்ள இப்பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த ஆக.15-ம் தேதி பிரதாப் சிங் என்பவரது வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளிச்சாமான்கள்,
மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்நிலையில் ஆக.28-ம் தேதி குணசேகரன் என்பவரது வீட்டில் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. இது தவிர
சிறு ,சிறு கொள்ளைச்சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. இச்சம்பவங்களில்
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே நாங்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எனவே உடனடியாக கூடுதல் பாதுகாப்பு அளித்து கொள்ளைச் சம்வபங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தை ரயில்வே குடியிருப்புவாசிகள் கைவிட்டனர்.
No comments:
Post a Comment