திருவொற்றியூரில் பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி
120 மாணவர்கள் பங்கேற்பு
திருவொற்றியூர், செப்.4:திருவொற்றியூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அளவிலான இப்போட்டியில் சுமார் 120 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
திருவொற்றியூர் தெற்கு மாடவீதியில் ராயல் நைட் செஸ் அகாடமியின் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொழிலதிபர் ஜி.வரதராஜன் அகாடமியைத் திறந்துவைத்து பின்னர் போட்டிகளையும் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. ஜூனியர், சீனியர் என பிரிக்கப்பட்ட பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 15 வயதினருக்கான பிரிவில் சாய்ஸ்ரேயா, கே.ஆர்.தினேஷ் ஆகியோர் முதலிடத்தையும், 10 வயதினருக்கான பிரிவில் லக்சனா, அர்ஜூன் வாசுதேவன் ஆகியோர் முதலிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அகாடமியின் இயக்குனர் சுசிந்திரகுமார், சமூக சேவகர் கே.சுப்பிரமணி, வழக்கறிஞர் ரமேஷ், ஏ.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment