திருவொற்றியூர், ஜூன் 11:சென்னைத் துறைமுக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் புதன்கிழமை நள்ளிரவுமுடிவுக்கு வந்தது.
சென்னைத் துறைமுகத்தில் உள்ள இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள்நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெய்னர்களை சுங்கத்துறை சோதனையிடுவதில் தேவையற்ற மந்த நிலைஇருப்பதாகக் கூறி கண்டெய்னர் லாரி டிரைவர்கள் புதன்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து துறைமுகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டன. மேலும் இரண்டு முனையங்களின் பணிகளும் அடியோடு ஸ்தம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த சுங்கத்துறை துணைஆணையர் அறிவழகன், சென்னைத் துறைமுகத் துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார் ஆகியோர் வேலை நிறுத்த்தில்ஈடுபட்ட டிரைவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் தாமதமின்றி கண்டெய்னர்களை அனுமதிக்க நடவடிக்கைஎடுக்கப்படும். இதற்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமைநள்ளிரவு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து துறைமுகத்தில் இயல்புநிலை திரும்பியது.
No comments:
Post a Comment