கடலில் ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யும் அதி நவீன கப்பல்
திருவொற்றியூர், ஜூன் 17: கடந்த ஜூன் 8-ம் தேதி காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானத்தைக் கண்டறிவதில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதெற்கென கடலில் ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யும் அதி நவீன கப்பல் எம்.வி.ஒலிம்பிக் கேன்யான் காக்கிநாடாவிலிருந்து வெள்ளிக்கிழமை வந்து சேர்கிறது என புதன்கிழமை சென்னையி்ல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி சத்ய பிரகாஷ் சர்மா புதன்கிழமை தெரிவித்தார்.
அப்போது அவர் மேலும் கூறியது,
கடந்த ஜூன் 8, திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 10 நாள்கள் ஆகிவிட்டன. கடந்த பத்து ஒன்பது நாள்களாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை விமானம் காணாமல் விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் கிடைப்பதாக கடற்படை கப்பலான சந்தயாக் கண்டறிந்தது. இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ள ஒலி அலைகளைக் கொண்டு இருப்பிடம் அறியும் கருவி (Sonar Locating Beacon-SLB) மூலம் சமிஞ்சைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனையடுத்து இதே பகுதிக்கு கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சிந்துத்வாஜ் வரவழைக்கப்பட்டது. இக்கப்பலும் விமானத்திலிருந்து சமிஞ்சை விட்டு விட்டு கிடைப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோல் தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) ஆய்வுக் கப்பலான 'சாகர் நிதி' எதிரொலி முறையில் இயங்கும் (Echo Sound) கருவி தொடர்ந்து விமானத்திலிருந்து கிடைத்த சமிஞ்சை குறி்த்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. எனவே காணாமல் போனதாக நம்பப்படும் இடத்திலிருந்தே இந்த சமிஞ்சைகள் கிடைத்திருப்பதன் மூலம் இப்பகுதியில்தான் விமானம் விழுந்திருக்கக் கூடும். இப்பகுதி சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 95 கடல் மைல் தூரத்திலும், சிதம்பரம் அருகேயுள்ள கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 16 கடல் மைல் தூரத்திலிருந்தும் அமைந்துள்ளது.
1000 மீட்டர் ஆழமான கடல்:
இந்நிலையில் காணாமல் போனதாக நம்பப்படும் இடத்திலிருந்தே இந்த சமிஞ்சைகள் கிடைத்திருப்பதன் மூலம் இப்பகுதியில்தான் விமானம் விழுந்திருக்கக் கூடும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இப்பகுதி சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 95 கடல் மைல் தூரத்திலும், சிதம்பரம் அருகேயுள்ள கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 16 கடல் மைல் தூரத்திலிருந்தும் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி சுமார் 700 மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர்வரை ஆழம் மீட்டர்வரை ஆழம் கொண்டதாக உள்ளது. எனவே ஆழம் அதிகமாக இருப்பதாலும், சமிஞ்சை விட்டு விட்டு கிடைத்து வருவதாலும் தற்போது இங்கு நிறுத்தப்பட்டுள்ள மூன்று கப்பல்களில் உள்ள அதி நவீன வசதிகளைக் கொண்டும் விமானத்தை கண்டறிவதில் மேற்கொண்டு முன்னேறிச் செல்ல முடியவில்லை.
அதி நவீன கப்பல் எம்.வி.ஒலிம்பிக் கேன்யான்:
இந்நிலையி்ல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அதிநவீனக் கப்பல் தொலைவிலிருந்து இயக்கும் கப்பலான (Remotely Operated Vessel-ROV) எம்.வி.ஒலிம்பிக் கேன்யான் உதவி கோரப்பட்டுள்ளது. இக்கப்பல் ஆயிரம் மீட்டர் ஆழம்வரை சென்று ஆய்வு செய்யும் வல்லமை படைத்தது. காக்கிநாடாவிலிருந்து வந்து கொண்டிருக்கும் இக்கப்பல் வெள்ளிக்கிழமை காலை வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். இக்கப்பல் ஒவ்வொரு கிலோ மீட்டராக படம் பிடித்து ஆய்வு செய்யும். இக்கப்பல் சமிஞ்சைகள் கிடைத்து வரும் பகுதியில் 50 மணி நேரம் ஆய்வு மேற்கொள்ளும்.
தேடும் பணியில் திருப்தி:
ஒரு விமானமோ, கப்பலோ கடலில் மூழ்கிவிட்டால், அதனைக் கண்டறிவதில் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தகைய முயற்சிகள் அனைத்தையும் அதிநவீன அறிவியல் சாதனங்களின் துணை கொண்டு இந்திய கடலோரக் காவல்படை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. காணாமல் போன டோர்னியர் விமானத்தில் உள்ள சமிஞ்சை எழுப்பும் கருவி 30 நாள்கள் வரை செயல்படும் தன்மை கொண்டது. எனவே விமானத்தை முழுமையாக மீட்க முடியும் என நம்புகிறோம். தேடும் பணியில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை. தேடும் பணி குறித்து காணாமல் போன விமானத்தில் சென்ற வீரர்களின் குடும்பத்தினர் திருப்தியடைந்துள்ளனர் என்றார் எஸ்.பி.சர்மா.
பெட்டிச் செய்தி:
ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் எம்.வி.ஒலிம்பிக் கேன்யான்
நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.வி.ஒலிம்பிக் கேன்யான் 2006-ல் கட்டமைக்கப்பட்டது. பல்நோக்கு வசதிகளுடன் கூடிய இக்கப்பலைக் கொண்டு ஆயிரம் மீட்டர் ஆழம்வரை கடலில் ஆய்வு செய்யமுடியும். மேலும் இதில் சக்தி வாய்ந்த பகுத்தறியும் திறன் கொண்ட ஒளிப்பதிவு கருவி (Videography) உள்ளது. இதன் மூலம் கடலுக்கடியில் ஆழமாகச் சென்று தெளிவாக அறிய முடியும். இந்திய கடற்படையின் கடலுக்கு அடியில் சென்று ஏவுகணையைச் செலுத்தும் வசதி கொண்ட கப்பல் (Torpedo Recovery Vessel-TRV) கடந்த ஆண்டு நவ.6-ல் விசாகபட்டனம் அருகே நடுக்கடலில் மூழ்கியது. இதில் இருந்த 5 கடற்படை வீரர்கள் இறந்து போய்விட்டனர். இக்கப்பலை மீட்பதில் எம்.வி.ஒலிம்பிக் கேன்யான் உதவி நாடப்பட்டது. பின்னர் இங்கு வந்து பணியில் ஈடுபட்டு மூழ்கிய கப்பலின் இருப்பிடத்தை துள்ளியமாக அளவிட்டு மூழ்கிய கப்பலை இக்கப்பல்தான். எனவேதான் காணாமல் போன விமானத்தை கண்டறிவதற்காக வரவழைக்கப்படுகிறது.

No comments:
Post a Comment