கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்து விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்
புதிய எண்ணெய் படலம், சமிஞ்சை கிடைத்தன
திருவொற்றியூர், ஜூன் 13:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 6 நாள்களான நிலையில் சனிக்கிழமை தேடுதல் பணியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் புதிய எண்ணெய் படலம் மிதப்பதாகவும், சமிஞ்சைகள் கிடைத்திருப்பதாகவும் கடலோரக் காவல் படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய எண்ணெய் படலம், சமிஞ்சை கிடைத்தன
திருவொற்றியூர், ஜூன் 13:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 6 நாள்களான நிலையில் சனிக்கிழமை தேடுதல் பணியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் புதிய எண்ணெய் படலம் மிதப்பதாகவும், சமிஞ்சைகள் கிடைத்திருப்பதாகவும் கடலோரக் காவல் படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் கடந்த ஐந்தாவது நாளான வெள்ளிக்கிழமை ஆகியும் முக்கிய தடயங்களை ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானத்தைத் தேடும் பணியில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழக காவல்த் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் கடலை ஒட்டி அமைந்துள்ள சதுப்பு நில மாங்குரோவ் காடுகளில் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் கடலுக்கு அடியில் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் சனிக்கிழமை இரவு காரைக்கால் பகுதிக்கு வந்து வந்து சேரும் எதிர்பார்கப்படுகிறது. சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். சந்தயாக் ஆகிய ஆழ் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இது கடலுக்கு அடியில் தரைப்பகுதிவரை ஆய்வு செய்யும் வசதிகளைக் கொண்டது. இதற்கு உதவியாக ரோந்து விமானங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கப்பலில் உள்ள சோனார் இருப்பிடம் அறியும் கருவி மூலம் 37.5 கிலோ ஹெர்ட்ஸ் கோணத்தில் காணாமல் போன விமானத்தின் சமிஞ்சை
கிடைத்துள்ளதாக இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய கமாண்டன்ட் சத்ய பிரகாஷ் சர்மா சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.
எந்த நேரமும் தெரியலாம்:
மேலும் தேசிய தொலை உணர்வு முகமை (National Remote Sensing Agency-NRSA), ஹைதராபாத்தில் உள்ள கடல்சார் தகவல்களுக்கான இந்திய தேசிய சேவை மையம் (The Indian National Centre for Ocean Information Services), தஞ்சாவூரில் உள்ள ஓம்கார் பவுண்டேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து பல்வேறு வியூகங்களில் தேடுதல் பணி நடைபெற்றுவருவதாகவும், தற்போது சமிஞ்சை கிடைத்துள்ளதால் அனைத்து தரப்பிலிருந்தும் சமிஞ்சை கிடைத்துள்ள பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி கட்ட தேடுதல் நடைபெற்றுவருகிறது. சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology)
'சாகர் நிதி' என்ற ஆய்வுக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு அடியில் தேடுதல் பணியை மேற்கொள்ள உள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்நோக்கு உதவிக் கப்பலின் (Multi Support Vehicle-MSV) உதவியை மீட்புக் குழுவினர் கோரியுள்ளனர். இதனைடுத்து காணாமல் போன விமானம் குறித்து எந்த நேரமும் அதன் நிலை குறித்து தெரிய வரலாம் என்பதே சனிக்கிழமை இரவுவரை உள்ள நிலைமையாக உள்ளது.

No comments:
Post a Comment