கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் மூலம் 318 பேருக்கு வீட்டுமனைப் பட்டா
திருவொற்றியூர், ஜூலை 6:திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆலை ஊழியர்கள் 318 பேருக்கு கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி. வெங்கடேஷ்பாபு, பொன்னேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிறுனியம் பி. பலராமன் ஆகியோர் புதன்கிழமை வழங்கினார்.
திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே யூனியன் கார்பைடு என்ற தனியார் நிறுவனத்தின் எவரெடி பேட்டரி தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு யூனியன் கார்பைடு பணியாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்காக மீஞ்சூர் அருகே நிலம் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இது குறித்து ஆலையின் பணியாளர்கள் தொடர்ந்து
போராடி வந்தனர். இந்நிலையில் பயனாளிகளின் விபரங்களை சேகரித்த கூட்டுறவு வீட்டுவசதித் துறை அதிகாரில் நடவடிக்கை மேற்கொண்டு 318 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க முடிவு செய்தனர். மேலும் இதற்கான நிலம் அளவீடு செய்யப்பட்டு அரசு அங்கீகாரம் பெறும் பணி நிறைவு பெற்றதையடுத்து பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, பொன்னேரி சட்டப் பேரவை உறுப்பினர் சிறுனியம் பலராமன்
ஆகியோர் 318 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவை வழங்கினர். இதில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பதிவாளர் கே.எம்.வெள்ளியங்கிரி, அதிமுக நிர்வாகிகள் பி.ராஜேந்திரன், கே.கிருஷ்ணன், எஸ்.அம்பிகைதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment