கண்டெய்னர் லாரி மோதி சுங்கத்துறை கண்காணிப்பாளர் சாவு
திருவொற்றியூர், ஜூலை 2:மணலி அருகே கண்டெய்னர் லாரி மோதி சென்னை சுங்க இல்ல ஆயத்தீர்வை கண்காணிப்பாளர் வெங்கட்சுரேஷ் (56)வெள்ளிக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ராமாவரத்தைச் சேர்ந்தவர் வெங்கட்சுரேஷ். சென்னை சுங்க இல்லத்தில் ஆயத்தீர்வை கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு திருவொற்றியூரில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக நிலையத்தில் பணி முடித்துவிட்டு மணலி, மாதவரம் வழியாக வீட்டிற்குச் செல்லும் வகையில் மோட்டார் சைக்கிள்மூலம்
சென்றுள்ளார். மணலி அருகே சென்னை உரத்தொழிற்சாலை ரவுண்டானா அருகே வந்தபோது மணலியிலிருந்து வந்த கண்டெய்னர் லாரி வெங்கட்சுரேஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து கவனக் குறைவாக லாரியை ஓட்டிய அய்யப்பன் (25) என்பவரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment