எண்ணூரில் மர்மக் காய்ச்சலால் இளம்பெண் சாவு
திருவொற்றியூர், அக்.17:எண்ணூரில் மர்மக் காய்ச்சலால் சந்தியா (17) என்ற இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் சங்கர். இவரது மனைவி செல்வி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் சந்தியா.
சந்தியாவிற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் தொடர் காய்ச்சல் இருந்து வந்ததால் அங்கிருந்து சில தினங்களுக்கு முன்பு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தியாவிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சந்தியா இறந்து போனார்.
கடந்த வெள்ளிக்கிழமைதான் எண்ணூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த தர்ஷினி என்ற ஏழு வயது சிறுமி மர்மக் காய்ச்சலால் இறந்து போன நிலையில் இப்பகுதியில் மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment