இந்தியா - நெதர்லாந்து இடையேயுள்ள தொழில் வாய்ப்புகள்
சென்னையில் இன்று கருத்தரங்கம்
திருவொற்றியூர், ஏப்.25:நெதர்லாந்து நாட்டுடனான தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை (இன்று) சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை தொழில் வர்த்தக சங்கம் (MCCI-Madras Chamber of Commerce and Industries) மற்றும் சென்னையிலுள்ள நெதர்லாந்து வணிக ஆதரவு அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் தகவல் தொழில் நுட்பம், விவசாயம், தளவாடம், தண்ணீர், எரிசக்தி, நகர்ப்புர வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையே உள்ள தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட
உள்ளது. நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரபாகரன், நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகள் மைக்கேல் பிர்க்கன்ஸ், மைக்கேல் வான் எர்கல், ஸ்டேன்ஸ் கிளிஜ்னன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கருத்தரங்க விபரங்களுக்கு 24349452/24349871 தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment