Sunday, 28 August 2016

வறுமையைப் பயன்படுத்திய மருத்துமனை நிர்வாகம்

   இச்சம்பவத்தில் அருகில் வசிக்கும் யாரோதான் நித்யாவிற் குழந்தையை 
விற்பதற்கான யோசனையைத் தெரிவித்திருக்கக் கூடும். இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் உடந்தையாக இருந்துள்ளது என நம்பப்படுகிறது.  ஏனெனில் 
எவ்வித கட்டணமும் இல்லாமல் பிரசவம் பார்க்க இத்தனியார் மருத்துமனையின் 
எதிரிலேயே பிரசவத்திற்கான அறுவைச்சிகிச்சை அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை உள்ளது. கணவன் ஓடிப்போய்விட்டகாவ் எழுந்த வருவாய் இழப்பு, மேலும் 5 வயதைக் கடந்த முதல் குழந்தையின் பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமம் உள்ளிட்ட காரணங்களைக் கொண்டு நித்யாவிடம் மருத்துவமனை நிர்வாகம் வறுமையைப் போக்க உதவுவதுபோல் நடந்து கொண்டுதான் 
இச்சம்பவம் நடைபெற்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
செயற்கை கருத்தரிப்பில் ஏற்பட்ட பின்னடைவு, சட்டப் பூர்வமாக தத்தெடுப்பதில் உள்ள பிரச்னைகளால்தான் சுரேஷ்குமார்-லதா இக்குழந்தையை பணம் கொடுத்து வாங்க சம்மதித்துள்ளனர்.உண்மையிலேயே மருத்துவமனை நிர்வாகத்திற்கு லாபம் நோக்கமில்லை என்றால் வறுமையிலும் ரூ.35 ஆயிரம் கட்டணத்தை பிசகின்றி வசூலித்துவிட்டார்களே... இதில் இடைத்தரகர்களாக மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டுள்ளதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை போலீஸார் திரட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment