தரச்சான்று நடைமுறை மூலம் சுங்கத்துறை பரிவர்த்தனை எளிமைப்படுத்தப்படும்
மத்திய வாரிய உறுப்பினர் பி.கே.பன்சால்
திருவொற்றியூர், ஆக.19:ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் இதில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு தரச்சான்று அளிக்கும் புதிய நடைமுறை மூலம் சுங்கத் துறை ஆவண பரிவர்த்தனை எளிமைப்படுத்தப்படும் என மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வாரிய (CBEC- Central Board of Excise and Customs) உறுப்பினர் பி.கே.பன்சால் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுங்கத்துறை சார்பில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அங்கீகாரம் பெற்ற பொருளாதார இயக்குனர் (AEO-Authorised Economic Operator) என்ற சர்வதேச தரச்சான்று அளிக்கும் புதிய நடைமுறையை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ஆனால் இதில் போதிய ஆர்வம் காட்டாததால் சில நூறு நிறுவனங்கள் மட்டுமே இச்சான்றிதழை பெற்றுள்ளனர். இந்நிலையில் இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் சுங்கத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
புதிய தரச்சான்று நடைமுறை குறித்த விளக்கக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயத்தீர்வை மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் பி.கே.பன்சால், வாரிய இணைச் செயலாளர் சத்ய ஸ்ரீனிவாஸ், சுங்கத் துறை
முதன்மை ஆணையர் பி.கே.தாஸ், சேவை வரித்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
அப்போது பி.கே.பன்சால் பேசியது,
நாடு தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பெற வேண்டும் எனில் சர்வ தேச அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் தொழில் செய்வதற்கான சூழல் குறித்து வரிசைப்படுத்தியதில் இந்தியா 133-வது இடத்தில் இருந்து வந்தது. இதற்கு காரணம் இந்தியாவில்
உள்ள சட்டம் மட்டும் விதிமுறைகள்தான். எனவே இதனை எளிமைப்படுத்தும்
பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டதன் பேரில் தொழில் செய்வதற்கான
உகந்த நாடுகளில் வரிசையில் இந்தியா படிப்படியாக முன்னேறி வருகிறது.
இதன் அடிப்படையில்தான் சுங்கத் துறை நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் புதிய தரச்சான்று நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கான நடைமுறைகளை ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆர்வம் காட்டவேண்டும். இத்தரச்சான்றினை பெறுவதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் இந்நிறுவனத்திற்கு கிடைக்கும். மேலும் சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்காக அளிக்க வேண்டி அதிக அளவிலான நடைமுறைகளை தவிர்க்க இயலும் என்றார் பன்சால்.
இந்நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் சிரில்ஜார்ஜ், காமராஜர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார், அதானி துறைமுக நிர்வாகிகள் சி.ஜே.ராவ், ராம்நாத் மற்றும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட சுங்கத்துறை முகவர்கள்,
சரக்குப் பெட்டக நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment