Friday, 16 October 2015

திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பன்னா இஸ்மாயில்


திருவொற்றியூர், அக்.13: புழல் சிறைச்சாலை வார்டன் இளவரசனைத் தாக்கிய வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி பன்னா இஸ்மாயிலை  திருவொற்றியூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை போலீஸார் ஆஜர்படுத்தினர்.
    சென்னையை அடுத்த புழல் சிறைச்சாலையில்  கடந்த 25 ந்தேதி  கைதிகளை சிறை அதிகாரிகள், காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது தீடீரென கைதிகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் சிறை வார்டன்  இளவரசன், காவலர்கள் முத்துமணி, மோகன், தேவராஜ் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்  உள்ளிட்ட 13 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கப்பதிவு செய்தனர்.  இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மூன்று பேரும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். 
   இந்நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி பன்னா இஸ்மாயில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு திருவொற்றியூர் நீதிமன்றத்தில் போலீஸார் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். இதனையடுத்து பன்னை இஸ்மாயிலை ரிமாண்டு செய்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி வசந்தகுமார் அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் பன்னா இஸ்மாயில் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

1 comment: