Thursday, 29 October 2015

கடலோரக் காவல் படையினருக்கான நீச்சல் போட்டி

சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கிழக்கு பிராந்தியம்

திருவொற்றியூர், அக்.28: சென்னையில் நடைபெற்ற இந்திய கடலோரக் காவல் படையினர் இடையேயான நீச்சல் போட்டியில் கிழக்குப் பிராந்திய அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
     இந்திய கடலோரக் காவல்படையினர் இடையேயான நீச்சல் போட்டிகள் சென்னையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்தன. இதில் இந்திய கடலோரக் காவல்படையின் தலைமையிடம், கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, அந்தமான் நிகோபர் பிராந்தியங்களின் பங்கேற்றனர். சுமார் 9 பிரிவுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் அதிக அளவில் வெற்றிகளைப் பெற்ற சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்குப் பிராந்திய அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை மேற்கு மற்றும் வடகிழக்கு அணிகள் பகிர்ந்து கொண்டன.
    புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்ட கிழக்கு கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி சத்ய பிரகாஷ் சர்மா வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். 

No comments:

Post a Comment