துறைமுகங்களுக்கு இடையேயான இறகுப் பந்து போட்டி முடிவுகள்
ஒட்டுமொத்த பரிசுகளை கொச்சி துறைமுகம் தட்டிச் சென்றது
திருவொற்றியூர், மார்ச் 31:பெருந்துறைமுகங்களுக்கு இடையே கடந்த மூன்று நாள்களாக சென்னையில் நடைபெற்ற வந்த இறகுப் பந்து போட்டிகளில் கொச்சி துறைமுகம் தட்டிச் சென்றது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்துறைமுகங்களுக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கமானது. இந்த ஆண்டுக்கான இறகுப் பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெற்றது.
இதில் சென்னை, ஜவகர்லால் நேரு, காமராஜர், காண்டலா, விசாகபட்டனம், வ.உ.சி, மும்பை, நியூ மங்களூர், கொச்சி உள்ளிட்ட ஒன்பது பெருந்துறைமுகங்களைச் சேர்ந்த
வீளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் துறைமுகம் செய்திருந்தது. போட்டியை கடந்த சனிக்கிழமை காமராஜர் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் முன்னிலையில் காவல்த் துறை கூடுதல் தலைவர் ஷகீல் அக்தர் தொடங்கி வைத்தார். இறுதிச் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்படி
இரட்டையர் பிரிவில் கொச்சி, விசாகபட்டனம், சென்னை முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர். ஒற்றையர் பிரிவில் ஜாய் டி ஆண்டனி, பிரனவ் சதீஷ், அஸ்வின் பால் (மூவரும் கொச்சி துறைமுகம்) முதல் மூன்று இடங்களில் வென்றனர். மூத்தவர்களுக்கான போட்டிகளில் ஜவகர்லால் நேரு, மும்பை, விசாகபட்டனம் ஆகியன முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.
போட்டிகளின் நிறைவு விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இதில் சென்னைத் துறைமுக தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரி டி.கந்தசாாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுப் பதக்கங்களை வழங்கினார். இதில் காமராஜர் துறைமுக இயக்குநர் சஞ்சய் குமார், பொதுமேலாளர் ஆர்.செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment