இந்திய கடலோரக் காவல் படை நடத்திய 'கடலில் ஒரு ஒரு நாள்'
சென்னை அருகே நடுக்கடலில் நடைபெற்றது
திருவொற்றியூர், ஜன.22:இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்தியம் சார்பில் சார்பில் கடலில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி சென்னை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய கடற்படையிலிருந்து கடலோரக் காவல்படை பிப்.1, 1977 ம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் பிப்.1 ம் தேதியை கடலோரக் காவல்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 41-வது கடலோரக் காவல்படை தினம் வரும் பிப்.1 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோரக் காவல்படையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள், படையினரின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்வதற்காக 'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செயல்விளக்க நிகழ்ச்சிகள்:
சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கடலோரக் காவல் படையின் கப்பல்களில் பொதுமக்கள், படைவீரர்களின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள்
நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடலோரக் காவல் படையினரின்
செயல்பாடுகள் குறி்த்து பல்வேறு செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு வின்ச் மூலம் தகவல், பொருள்கள் பரிமாற்றம் செய்வது, கடத்தல்காரர்களை விரைந்து சென்று பிடிப்பது, தீ விபத்து ஏற்பட்ட வணிகக் கப்பல் ஒன்றை தீயணைத்து மீட்பது, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது, டோர்னியர் விமானம் மூலம்
கடலோரப் பகுதிகளை விரைந்து சென்று கண்காணிப்பது, கப்பலில் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்க நிகழ்ச்சிகள் இதில் நடத்திக் காண்பிக்கப்பட்டன.
அணி வகுத்த கப்பல்கள்:
கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோரக் காவல் படையின் சாகர், சமுத்ரா பகீரதர், வரத், அபீக், ராஜ்தரங், அனாக், ராணி கைடின்லியூ ஆகிய ரோந்துக் கப்பல்கள், சி 415, சி 430 ஆகிய சிறிய கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், இரண்டு டோர்னியர் விமானங்கள் உள்ளிட்டவை கலந்து கொண்டன. இறுதியாக அனைத்து கப்பல்களும் வரிசையாக அணிவகுத்து சென்றன. அப்போது கப்பல்களில் இருந்த வீரர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment