வடசென்னையில் மார்கழி தெய்வத் தமிழிசை விழா
திருவொற்றியூர், டிச.14: வடசென்னையில் 27-ம் ஆண்டு மார்கழி தெய்வத் தமிழிசை விழா டிச.16 தொடங்கி ஒரு மாதம் வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.கி.இரமணன், டாக்டர் மகாலிங்கம் கூறியது,
மார்கழி மாதத்தில் இசை விழாக்கள் என்றாலே தென்சென்னையில் மட்டுமே பெருவாரியாக நடத்தப்படுகின்றன. வடசென்னையிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற என்ற ஆர்வம் காரணமாக இசை அன்பர்கள் இணைந்து இவ்விழாவினை கடந்த 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். மார்கழி மாதம் தொடங்கும் டிச.16 செவ்வாய்க்கிழமை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமர் ஆலயத்தில் நடைபெற உள்ள முதல் இசைவிழாவை பத்மபூஷன் டி.எச்.வினாயகராம் தொடங்கி வைக்கிறாம். தினமும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் டெல்லி மகாலட்சுமி, சுவாமிநாதன், சீர்காழி சிவசிதம்பரம், டி.கே.எஸ்.கலைவாணன், பேராசிரியர் ஆனந்தராமன் உள்ளிட்ட முன்னணி கலைஞர் கலந்து கொள்ள உள்ளனர். தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ள இத்தொடர் நிகழ்ச்சிகளில் பக்தர்களும், இசை ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என்றனர்.
No comments:
Post a Comment