முகவை.க.சிவகுமார்,
'வறுமை ஒழிய வேண்டும் ! ஏழ்மையை விரட்ட வேண்டும் ! ' என்ற கோஷங்கள் எல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே நாம் கேட்டவைதான். இவற்றை எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற சிந்தனை மிகுந்த சினிமா கலைஞர்கள் எல்லாம் நகைச்சுவையாக விமர்ச்சித்தவை ஏராளம். காங்கிரஸ், ஜனதா, பாரதீய ஜனதா, தேசிய முன்னணி, தேசிய முற்போக்கு கூட்டணி, ஐக்கிய முன்னணி என பல்வேறு ஆட்சியாளர்கள் இந்தியாவை 63 ஆண்டு காலம் ஆண்டுள்ளனர். ஆனால் வறுமையும் ஒழியவில்லை. ஏழ்மையையும் விரட்ட முடியவில்லை. காரணம் என்ன? வறுமையையும், ஏழ்மையையும் ஒழிக்க எந்த திட்டம் கொண்டுவந்தாலும் முதலில் துவக்கப்படும்போது அதன் குறிக்கோள்கள் சிறப்பாக இருக்கும். பின்னர் படிப்படியாக அரசியல் புகுந்துவிடும். பின்னர் திட்டமே செயலற்றுப் போய்விடும். இது கடந்த கால வரலாறு.
இதில் ஒன்றாக மகளிர் சுயஉதவி குழுக்கள் இயக்கமும் இணைந்து விடுமோ என்ற ஐயப்பாடு தற்போது எழுந்துள்ளது. 1989-ல் தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவில் துவங்கப்பட்ட இத்திட்டம் 21 ஆண்டுகளில் இது தல விருட்சமாய் வளர்ந்துள்ளது என்பது அதன் புள்ளிவிபரங்களைப் பார்த்தாலே புரியும்.
2010, மார்ச் 31 தேதியில் நகர்ப்புறம், ஊரகம் என மொத்த மகளிர் குழுக்களின் எண்ணிக்கை 4,41,311. இவைகளி்ல் 69.91 லட்சம் பெண்கள் உறுப்பினராக உள்ளனர். இவர்களின் மொத்த சேமிப்புத் தொகை ரூ. 2,568 கோடி ஆகும். மொத்த வங்கிக் கடன் தொகை ரூ. 8,130 கோடி ஆகும். தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 469 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் போன்ற மக்கள் அமைப்புகள் மூலம்
இத்திட்டம் சிறப்பாகவே செயல்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட திட்டம் துவக்கப்பட்டபோது அறிவித்த நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா?
திட்டம் துவங்கியபோது....
வறுவைக் கோட்டிற்கு கீழே (பி.பி.எல்) வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 10 முதல் 20 பேர் வரை உறுப்பினர்களாகக் கொண்டு முதலில் குழு அமைக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் சேமிக்கும் நிதியை 'பொதுநிதி' என்ற பெயரில் வரவு வைக்க வேண்டும். அந்த நிதியை வைத்து ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும். இதில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். மேலும் தொழிலை விரிவு படுத்த வங்கிக் கடனைப் பெறலாம். வங்கியில் வாங்கிய கடனை தவணை தவறாமல் கட்டி வந்தால் இரண்டாவது கடனையும் வங்கிகள் வழங்கும். பின்னர் சுழல் நிதியாக ரூ.10 ஆயிரம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் குழு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்ட கடன் தற்போது முதல் கடனாக ரூ.50 ஆயிரம், இரண்டாவதாக ரூ.ஒரு லட்சம், மூன்றாவதாக ரூ.1.50 லட்சம் என கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் 1983-ல் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் மாவட்டங்கள்தோறும் மகளிர் திட்டங்கள் என்ற பெயரில் சுய உதவி குழுக்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கணினி பயிற்சி, கட்டுமானம், ஓட்டுநர், ஆயத்த ஆடைகள், செவிலியர் போன்ற தொழிற்பயிற்சிகளும், தையல், காகிதப் பை, மெழுகுவர்த்தி, அப்பளம் தயாரித்தல் போன்ற பயிற்சிகளும் இத்திட்டம் மூலம் கற்றுத் தரப்படுகின்றன. இதுவரை 56,748 பெண்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு பணிகள் மூலம் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் சிறப்படையும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
கந்து வட்டி ஒழிந்து விட்டதா?சுய உதவிக் குழுக்கள் அமைத்து, தொழில் தொடங்கி, வாழ்வாதாரம் பெருகும் என நோக்கம் இருந்தாலும் 4.41 லட்சம் குழுக்களில் எத்தனை குழுக்கள் இவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்விக்குறிதான். இது குறித்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் நீண்ட நாள்களாக முதுநிலை பயிற்றுனராக உள்ள மைக்கேல் கூறியது,
எந்த திட்டம் என்றாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். முதலில் நிறைகள் என்றால்....
வீட்டில் அடைந்து கிடந்த பெண்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது இத்திட்டம், கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, பெண் சிசுக்கொலை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, பெண்கள் மூலம் வியாபாரம் பெருகி உள்ளது, தண்ட வட்டி, கந்து வட்டி குறைந்துள்ளது, சுய தொழில் வளர்ந்துள்ளது. குடும்பத்தில் பெண்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.சமூக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.
குறைகள் என்றால்.....
இருப்பினும் குழுக்கள் அமைப்பதில் பல்வேறு முறைகேடுகள் துவங்கி உள்ளன. தொண்டு நிறுவனங்கள் குழுக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகின்றன. தொண்டு நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி உள்ளன. குழுக்களில் உள்ள பெண்களை தங்களுக்குச் சாதமாக்க அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். இதனால் கடந்த தேர்தல்களில் இது வெளிப்படையாக தெரிந்தது. இது குறித்து மேலும் ஒரே பெண் பல்வேறு குழுக்களில் பங்கேற்று கடன் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்றார்.
ஏழை மக்களின் வாழ்வு உயர வேண்டும். இதற்கு திட்டங்கள் பல வேண்டும். இதில் மகளிர் சுய உதவி குழுத் திட்டமும் என்றுதான் ஐயமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்த பயணம் கடந்த சில ஆண்டுகளாக திசை மாறி வருகிறது என பல்வேறு சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. எனவே அரசு, தொண்டு நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் என பல்வேறு தரப்பினரும் இப்பயணத்தை நேர்வழிக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

No comments:
Post a Comment