Wednesday, 20 April 2016

தொகுதி அறிமுகம்:

திருவொற்றியூர் தொகுதி

தமிழக சட்டப்பேரவை தொகுதி வரிசை எண்:10
    
வரலாறு:
      திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருந்தாலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதி திருவொற்றியூர் தொகுதி. வடசென்னையில் அமைந்துள்ள இத்தொகுதி 1967 முதல் இருந்து வருகிறது.  2011 தேர்தலுக்கு முன்பு வரை மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருந்த திருவொற்றியூர்  கடந்த தொகுதி சீராய்வின் போது திருவொற்றியூரிலிருந்து மாதவரம் தொகுதி தனியாக பிரிக்கப்பட்டது. அன்றைய சென்னை பட்டினத்தை ஒட்டிய பழமையான கடலோர கிராமங்களில் திருவொற்றியூரும் ஒன்று. துறவி பட்டினத்தார் முக்தி அடைந்து ஜீவசமாதி அடைந்த இடமும் திருவொற்றியூர்தான்.   
     எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலண்டு, எண்ணூர் பவுண்டரீ, எம்ஆர்எப் டயர், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உர ஆலை, என்பீல்டு மோட்டார் சைக்கிள், கார்பொரெண்டம், டிபிஎல், எம்பிஎல், எவரெடி என ஏராளமான கனரக தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதி திருவொற்றியூர். மேலும் இத்தொகுதியில் அடங்கிய மணலியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 
சிறப்புகள்:
    திருவொற்றிசுவரர் என அழைக்கப்படும் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடைம்மன் கோயில், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தீஸ்வரர் கோயில், வடகுருஸ்தலம் என அழைக்கப்படும் தட்சணாமூர்த்தி கோயில் உள்ளிட்ட கோயில்கள் அடங்கிய ஆன்மீக நகரம் திருவொற்றியூர். தியாகராஜர் கோயில் தெப்பக் குளம் மற்றும் ஏராளமான மடங்கள் இங்கு அமைந்துள்ளன. இப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பக்கிங்காம் கால்வாய் சென்னை மாநகரத்திற்குள் நுழைவது திருவொற்றியூர் தொகுதியில்தான்.
தொகுதியில் எல்லைகள், அடங்கியுள்ள பகுதிகள்:
     திருவொற்றியூர் தொகுதிக்கு கிழக்கே வங்கக் கடல், தெற்கே ஆர்.கே.நகர், வடக்கு மற்றும் மேற்கில் மாதவரம் தொகுதியுன் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கத்திவாக்கம் அடங்கிய திருவொற்றியூர் மண்டலம், சின்னச் சேக்காடு அடங்கிய மணலி மண்டலம் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. அடங்கியுள்ளன.
தற்போதைய வாக்காளர்கள்
          ஆண்         - 1,43,741
          பெண்         - 1,43,076
          திருநங்கை    -       66
      
  மொத்த வாக்காளர்கள் - 2,86,883

மொத்த வாக்குச் சாவடிகள்  : 292

தொகுதியில் வென்றவர்கள்:

 1967  அ.பொ.அரசு              - திமுக
 1971  மா.வெ.நாராயணசாமி    - திமுக
 1977  பொ.சிகாமணி            - அதிமுக
 1980   குமரிஅனந்தன்           - காந்தி காமராஜ் காங்கிரஸ்
 1984   ஜி.கே.ஜே.பாரதி        - இந்திய தேசிய காங்கிரஸ்
 1989   டி.கே.பழனிசாமி        - திமுக
 1991   கே.குப்பன்              - அதிமுக
 1996   டி.சி.விஜயன்           - திமுக
 2001   த.ஆறுமுகம்            - அதிமுக
 2006   கே.பி.பி.சாமி           - திமுக
 2011   கே.குப்பன்              - அதிமுக


தேர்தல் நடத்தும் அலுவலர்/தொடர்பு எண்
                           ஏ.சிகாமணி @ பாபு
           சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர்
            தொலைபேசி எண்: 044-25993494  செல்லிடபேசி எண்: 94451-90001

No comments:

Post a Comment