-இன்று பவள விழா நடைபெறுகிறது.
திருவொற்றியூர், ஜூலை.26.: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 75 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கான பவள விழா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
1781- ஆண்டில் சென்னையில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் பட்டினியால் வாடினர். இவர்களைக் காப்பாற்றும் நோக்கில் மெட்ராஸ் பிரசிடென்சி அரசும், தூய மேரி தேவாலயமும் இணைந்து ராயபுரம் பகுதியில் தற்போதைய மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் கஞ்சித் தொட்டியை திறந்தன. பின்னர் இங்கேயே ஒய்வெடுக்கவும் வசதிகள் ஏற்படுத்துப்பட்டது. பின்னர் இந்த இடம் கிராம ஹெட்மேனின் நினைவாக Monegar Choultry என மக்கள் பெயரிட்டு அழைத்தனர். மோனிகர் சவுல்ட்ரியின் ஒரு பகுதி இன்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது. உணவும், மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதால் நீண்டகாலமாக இம்மருத்துவமனை கஞ்சித் தொட்டி மருத்துவமனை என்றே அழைக்கப்பட்டு வந்தது.
1797- டாக்டர் ஜான் ஹோலன் அண்டர்வுட் என்பரால் மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டது. இதில் 90 படுக்கை வசதிகள் ஏற்படுத்துப்பட்டன. 1807-ல் மோனேகர் சவுல்ட்ரி இம்மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது. 1968-ல் பெண்களுக்குக் சிகிச்சை அளிக்க வசதியாக 40 படுக்கைகள் கொண்ட சிறப்பு கட்டடம் அமைக்கப்பட்டது. பின்னர்
செங்குன்றம் ஏரியிலிருந்து இம்மருத்துவமனைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதற்கு ராஜா சர் ராமசாமி முதலியார் உதவி செய்தார். இவரது நினைவாக தற்போதைய ஆர்.எஸ். ஆர்.எம். மகப்பேறு மருத்துமனை செயல்பட்டு வருகிறது.
1903-ல் ராயபுரம் மெடிக்கல் ஸ்கூல் தொடங்கப்பட்டது. பின்னர் மெட்ராஸ் பிரசிடென்சியில் கவர்னராக இருந்த ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லியின் நினைவாக ஸ்டான்லி மெடிக்கல் ஸ்கூல் என பெயர் மாற்றம் பெற்றது. இப்பள்ளிதான் படிப்படியாக வளர்ந்து ஜூலை 2, 1938-ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்வு பெற்றது. முதலில் 72 மருத்துவ மாணவர்கள், 462 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துமனை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இம்மருத்துவக் கல்லூரியின் முதல் டீனாக டாக்டர் அனந்தநாராயன ஐயர் பதவி வகித்துள்ளது. இதுவரை 25 டீன்கள்கள் இப்பதவியில் இருந்துள்ளனர். 26 வது டீனாக டாக்டர் கீதாலட்சுமி இருந்து வருகிறார்.

சாதனை படைத்த சிறப்பு மருத்துவத் துறைகள்:
இம்மருத்துமனையில் முதலில் உடல் கூறு இயல் சிறப்பு மையம் டாக்டர் அனந்தநாராயண ஐயரால் தொடங்கப்பட்டது. 1971-ல் பேராசிரியர் டாக்டர் ஆர்.வெங்கடசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைப் பிரிவு இதுவரை 3.30 லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளது. சுமார் 70 ஆயிரம் பேருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இவ்வகைச் சிகிச்சையில் இந்தியாவிலேயே முன்னோடி மையமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது கை மாற்றும் அறுவைச் சிகிச்சை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
1995-ல் டாக்டர் ஆர்.பி.சண்முகம் தலைமையில் தொடங்கப்பட்ட கல்லீரல், குடல் பகுதி சிகிச்சை பிரிவில்தான் இந்தியாவிலேய கல்லீரல் மாற்று முதல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பேராசிரியர் டாக்டர் ஆர். சுரேந்திரன் தலைமையில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு சிறப்பு மையமாக வளர்ச்சி பெற்றது. 2000-ஆம் ஆண்டில் ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்று இம்மையத்திற்கு வழங்கப்பட்டது.
நாட்டிலேயே அரசு மருத்துவமனையில் இச்சான்று பெற்ற மையம் இது என்பதும், கல்லீரல் செயலிழந்த 37 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இந்தியாவின் முன்னணி மையமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்டான்லி மருத்துவமனை என்றாலே நினைவுக்கு வருவது எலும்பு சிகிச்சைப் பிரிவுதான். இப்பிரிவுக்கு மட்டும் தினமும் சுமார் 800 நோயாளிகளுக்கும் மேல் சிகிச்சை பெற வருகின்றனர்.

No comments:
Post a Comment