Friday, 3 July 2015

இந்திய கடற்படை: புதிய அதிகாரி பொறுப்பேற்பு

திருவொற்றியூர், ஜூன்.30:இந்திய கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு கடற்படை அதிகாரியாக கம்மோடர் அலோக்பட்னாகர் சென்னையில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். 
   இது குறித்து பாதுகாப்புத் துறை வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவின் தலைமையகம் ஐ.என்.எஸ். அடையார் சென்னையில் உள்ளது. இதன் கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்த கம்மோடர் அமர் கே.மகாதேவன் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதனையடுத்து கம்மோடர் அலோக்பட்னாகர் புதிய கடற்படை அதிகாரியாக  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றார். அவருக்கு மகாதேவன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அலோக்பட்னாகர் மராட்டிய மாநிலத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் 1984-ல் படித்துப் பட்டம் பெற்றவர். மேலும் பல்வேறு கடற்படை கப்பல்களில் அதிகாரியாகப் பணியாற்றியுள்ள இவர் இறுதியாக புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் முதன்மை இயக்குனராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment