தேசிய கடல் மீன்வளக் கணக்கெடுப்பு பணி தொடங்கியதுதமிழகத்தில் 591 மீனவ கிராமங்களில் கணக்கெடுப்பு
திருவொற்றியூர், பிப்.1:நாடு முழுவதும் சுமார் 4,250 மீனவர் கிராமங்களில் அவர்களின் விபரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் மீன்வளத்துறை சார்பில் கடல் மீன்வளம் குறித்த கணக்கெடுக்கும் பணி 1981-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு கடந்த 2010-ம் ஆண்டு கடைசியாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் 591 மீனவ கிராமங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் சுமார் 4,250 மீனவ கிராமங்களில் சுமார் 11 லட்சம் மீனவ குடும்பங்களில்
இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இக்கணக்கெடுப்பின் போது கடல் மீன் வளத்தை ஆதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் மீனவர்கள் எண்ணிக்கை மற்றும் மீன் பிடிச்
சாதனங்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து துல்லியமாக சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தேசிய மீன்வளக் கணக்கெடுப்பு பணி
திங்கள்கிழமை தொடங்கியது. இதனையடுத்து சென்னை காசிமேட்டில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
3 லட்சம் மீனவ குடும்பங்களில் கணக்கெடுப்பு:
கணக்கெடுப்பு குறித்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்ட அலுவலர் ஆராய்ச்சியாளர் பி.லட்சுமிலதா செய்தியாளர்களிடம் கூறியது,
தமிழகத்தின் 15 கடலோர மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் மீனவ குடும்பங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இக்கணக்கெடுப்பும் பணியில் சுமார் 700 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மீனவர்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, சமுதாய நிலை, கல்வி, பயன்படுத்து மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள், மீன்பிடித் தொழில் சார்ந்த இதர தொழில்கள், படகு கட்டும் தளம், பனிக்கட்டித் தொழிற்சாலை, மீன்
பதனிடும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
மேலும் 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது தமிழகத்தில் 1.92 லட்சம் குடும்பங்களாக இருந்த மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 3 லட்சமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணங்கள் குறித்தும் விபரங்கள் சேகரிக்கப்படும். மேலும் இதில் பாரம்பரிய மீனவர்கள் குடும்பங்கள் குறித்து மட்டுமே கணக்கெடுக்கப்பட உள்ளது. மீனவ கிராமங்களில் வசிக்கும் இதர வகுப்பினர்,
இதேபோல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள இதர வகுப்பினர் குறித்து கணக்கெடுக்க தற்போது திட்டமிடவில்லை என்றார் லட்சுமி லதா.
No comments:
Post a Comment