Friday, 13 March 2015

அய்யா வைகுண்டர் 183-வது அவதாரத் திருநாள் ஊர்வலம் 

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவொற்றியூர், மார்ச் 4:அய்யா வைகுண்டர் 183-வது அவதாரத் திருநாள் ஊர்வலம் புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. 
    அய்யா வைகுண்டர் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்ற ஊரில் பிறந்தவர். இவரது கொள்கைகளைப் பின்பற்றிவரும் ஆயிரக்கணக்கானோர் 
வடசென்னை பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும் அய்யா வைகுண்டருக்கு மணலி புது நகரில் ராஜகோபுரத்துடன் கூடிய வைகுண்ட தர்மபதி அமைத்து வழிபட்டு வருகின்றனர். அய்யா வைகுண்டரின் 183-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு அகிலத் திரட்டு ஆகம ஊர்வலம் புதன்கிழமை சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கி தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் வழியாக மணலி புதுநகரில் அமைந்துள்ள வைகுண்ட தர்மபதியி்ல் நிறைவடைந்தது. 
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் வைகுண்ட தர்மபதியில் உச்சி படிப்பு, அன்னதானம், தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல் ,இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தர்மபதி நிர்வாகி தங்கப் பெருமாள், தொழிலதிபர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment